பொதுவாக கொய்யா மரத்தின் இலை, காய், பழம், பட்டை என் அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளது. அதில் கொய்யா இலையின் மருத்துவ குணத்தை பற்றியும் எந்ததெந்த பிரச்சினைகளுக்கு எப்படி பயன் படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
சக்கரை வியாதி சரியாக;
வெறும் மூன்றே மாதத்தில் சக்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர நான்கு கொய்யா இலைகள், 1 தேக்கரண்டி சீரகம், அரைத் தேக்கரண்டி வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து 2 டம்பளர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அது 1 டம்பளராக வற்றியபின் அதனை வடிகட்டி காலை மற்றும் மாலை வேளைகளில் பருகி வந்தால் போதும். இது சாப்பிடும் பொது டீ மற்றும் காபி குடிப்பதை தவிர்க்கவும். உடல் இடையை குறைப்பதற்கும் இந்த கசாயத்தை குடித்து வரலாம். கொய்யா இலை உடலி்ன் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால் நாம் ஆரோக்கியமான முறையில் உடல் எடையையும் குறைக்கலாம்.
இதையும் படிங்க: நீண்ட நாள் வாழ வேண்டுமா ? உங்க இதயம் என்ன சொல்லுது...

சுவாசக்கோளாறு நீங்க ;
புற்று நோய் என்று சொல்லக்கூடிய கேன்சர் நோயை வராமல் தடுக்கும் மூலக்கூறுகள் இதில் உள்ளன. மேலும் நுரையீரலையும் ஆரோக்கியமாக செயல்பட வைக்கும் வல்லமையை கொண்டுள்ளது. சுவாசம் சம்மந்தமான பிரச்சினைகள் ஆஸ்துமா, தொண்டைக் கட்டு, தொண்டை புண், அடிக்கடி சளி, இருமல் வருவது இவை அனைத்தையும் விரைவில் சரி செய்யும் தன்மை கொண்டது. இதற்கு நான்கு கொய்யா இலைகளை 1 டம்பளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அது கால் டம்பளர் வந்தவுடன் வடிகட்டி இளம் சூட்டில் பருகி வர வேண்டும். ஒரு வாரம் இந்த கசாயத்தை பருகி வர தொண்டை, நுரையீரல் பிரச்சினைகள் சரியாகும். எக்காரணம் கொண்டும் சக்கரையை சேர்க்க கூடாது.

பல் ஆரோக்கியம் பலப்பட ;
பற்கள் ஆரோக்கியமாக இருக்க கொய்யா இலைகள் பெரிதும் உதவியாக இருக்கும் . கொய்யா இலைகளை காய வைத்து பொடி செய்து காலையில் பல் தேய்த்து வந்தால் பல் வலி, பல் கூச்சம், ஈறுகளில் இரத்த கசிவு, ஈறுகள் வீக்கம் அடைவது குணமாகும். மூன்று கொய்யா இலைகளுடன் ஏலக்காய் சிறிதளவு சேர்த்து கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர்நாற்றம், வாயில் புண் உள்ளிட்ட பிரச்சினைகள் சரியாகும்.

தலைமுடி பராமரிப்பு ;
தலை முடி ஆரோக்கியத்தை பராமரிக்க கொய்யா இலைகள் பெரிதும் பயன்படுகின்றன. முடி உதிர்வு அதிகமாக உள்ளவர்கள் ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலைகளை போட்டு பத்து நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து அதனை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்த தண்ணீர் சூடு ஆரிய பின் அதனை தலையின் வேர் பகுதிகளில் நன்றாக படும்படி ஊற்றி மசாஜ் செய்து 1மணி நேரம் கழித்து தலை குளிக்கவும். வாரத்திற்கு மூன்று முறை இதை செய்து வந்தால் தலைக்கு நல்ல இரத்த ஓட்டத்தை தூண்டி, பொடுகை விரட்டி, வேர்களுக்கு பலம்தரும். வைட்டமின் b3, வைட்டமின் b6 ஊட்டச்சத்து இருப்பதால் முடி உடைந்து போவதை தடுத்து நீண்ட முடியாக வளர உதவியாக இருக்கும்.

மூளை சுறுசுறுப்பு ;
கொய்யா இலையின் கொழுந்தை அப்படியே சாப்பிட்டு வருவதால் மூளை நன்கு சுறுசுறுப்படைந்து, ஆரோக்கியமாக இருக்க உதவும். வளரும் குழந்தைகளுக்கு கல்வியில் கவனம் செலுத்த தினமும் இதனை கொடுத்து வருவது சிறப்பு பலனைத் தரும்.
மனச் சோர்வு;
இதயம் சம்மந்தமான பிரச்சினைகளுக்கு இது சிறந்த தீர்வை தரும் அற்புதமான மூலிகை. கெட்ட கொழுப்புக்களின் அளவை கட்டுக்குள் கொண்டு வந்து, இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்பு இதில் உள்ளது. கொய்யா இலையின் தேநீரை காலை மற்றும் மாலை வேளைகளில் அருந்தி வந்தால் மன அழுத்தம், மனச் சோர்வு, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சினைகளும் சரியாகும்.

சரும ஆரோக்கியம் ;
முகப்பரு, முகப்பருக்களின் தழும்பு நீங்கி பிரகாசமாக தெரிய கொய்யா இலை பொடியுடன் பன்னீர் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் தடவ வேண்டும். பிறகு, பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கும்.
இவ்வளவு நண்மைகள் கொண்ட கொய்யா இலைகளை இனிமேல் வீணாக குப்பையில் போடாமல், சிறந்த முறையில் பயன் படுத்தி பலன் அடைவோம்.
இதையும் படிங்க: முகம் பளிச்னு ஆகணுமா? ஆரஞ்சு தோல் போதுமே