நம் அனைவருக்கும் ஒரே மாதிரியான தோல் இருப்பதில்லை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு தன்மையுடன் மாறி மாறி உள்ளது. ஆகையால், முதலில் நம் தோலின் தன்மை எது என்று தெரிந்து வைத்துக் கொண்டு, ஸ்கின் கேர் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
நம் தோல் வயதிற்கு ஏற்றார் போல் ஆயிலி, காம்பினேஷன், ட்ரை, சென்சிடிவ் ஸ்கின் என மாறிக்கொண்டே இருக்கும். நம் சுற்றுச் சூழல், தட்ப வெட்பம், வானிலையும் கூட தோலின் தன்மைக்கு பெரும் பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆகையால் எந்தவொரு ஸ்கின் கேர் தொடங்கும் முன் முதலில் நம் தோல் எந்த தன்மையை கொண்டுள்ளது என்று தெரிந்து வைத்துக் கொள்ளவேண்டும்.

ஆயிலி, காம்பினேஷன், அக்னீ, ட்ரை, சென்சிடிவ் ஸ்கின்;
முகத்தில் எப்போதுமே எண்ணெய் வழிந்து பிசு பிசு என்று இருந்தால் அது ஆயிலி ஸ்கின்.
நெற்றி மூக்கு தாடை பகுதிகலில் மட்டும் எண்ணெய் வழிந்து மற்ற இடங்களில் சாதாரணமாக இருந்தால் அது காம்பினேஷன் ஸ்கின்.
இதையும் படிங்க: பிரபலமாகும் கேரட் ஆயில், உண்மையில் பயன் தருமா ?
அக்னீ ஸ்கின் முகத்தில் முகப்பருக்கள் நிறைந்து காணப்படுவது. முகத்தில் எந்த பொருளையும் ஏற்றுக் கொள்ளாமல் சிறு சிறு பருக்கள் அதிகம் தோன்றுவது.
முகம் ஈரத்தன்மை இழந்து வறண்டு பொலிவில்லாமல் இருந்தால் அது ட்ரை ஸ்கின். இந்த வகை தோல் எளிதில் சேதமடைந்து சுருக்கங்கள் சிறு வயதிலே வரும் வாய்ப்பு அதிகமுண்டு.
சென்சிடிவ் ஸ்கின் சிவந்து போகும் தன்மை இதற்கு உண்டு. அதாவது காரசாரமான உணவை எடுத்துக் கொண்டாலோ, வெயிலில் சென்றாலோ, சென்ட் , தூசி பட்டாலோ மிகவும் சிவந்து போகும்.
நம் தோல் எந்த தன்மையை கொண்டுள்ளது என்று அறிந்து கொள்ள குழப்பம் இருந்தால் ஸ்கின் கார்டு டெஸ்ட் ஐ அருகிலுள்ள மருந்து கடைகளில் வாங்கி பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

கிளென்ஸருக்கு பதில் சோப் பயன்படுத்தக் கூடாது, சோப்பில் உள்ள அதிகப்படியான ரசாயனம் செபம் என்று சொல்லக்கூடிய தோலை பாதுகாக்கும் திரவத்தை வற்ற வைத்து முகத்தை வறண்ட சருமாக்கி பொலிவிழக்கச் செய்யும். அல்லது அதிகப்படியான எண்ணெயை சுரக்கச் செய்யும். சில நேரங்களில் அலர்ஜி, தோல் அரிப்பு கூட ஏற்படலாம். சோப்பில் ph லெவல் அதிகமாக இருப்பதால் இது போன்று நடப்பதாக கூறப்படுகிறது. எனவே கிளென்சர் பயன்படுத்துவது தான் தோலுக்கு சிறந்தது.
ஆயிலி ஸ்கின் உள்ளவர்கள் ஜெல் அல்லது ஃபோம்கள் கொண்ட கிளென்சரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் கிளைக்கோலிக் ஆசிட், சாலிசிலிக் ஆசிட் மூலக்கூறுகள் உள்ளவையா என்று பார்த்து வாங்கி பயன்படுத்தலாம். முகப்பருக்கள் அதிகம் உள்ளவர்கள் நியாசினமைட் , சிங்க், நிறைந்துள்ள கிளன்சரை பயன்படுத்துவது நல்லது.
காம்பினேஷன் ஸ்கின் உள்ளவர்கள் கிளசரின் அல்லது சிடைல் ஆல்கஹால் உள்ள கிளன்சரை பயன்பத்தலாம். அது கிரீம் அல்லது லோஷன் ஆக இருப்பது நல்லது.

டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஃபோம் ,லோஷன் அல்லது கிரீம் போன்ற கிளென்ஸரை பயன்படுத்தலாம். அதில், சிட்டைல் ஆல்கஹால் , சிராமைட்ஸ், ஹைலோரோனிக் ஆசிட் இருப்பது அவசியம்.
சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் லோஷன் அல்லது கிரீம் உள்ள கிளன்சரை மட்டும் பயன்படுத்த வேண்டும். அதில் சிட்டைல் ஆல்கஹால், சிராமைட்ஸ், பிரோப்பிலீன் ஆல்கஹால், கிளசரின் இருப்பது அவசியம். இவர்கள் வைட்டமின் சி உள்ள கிளன்சரை பயன்படுத்தக் கூடாது.

நாம் வாங்கும் எந்தவொரு கிளன்சரிலும் PH சரியான அளவு உள்ளதா என்றும் நம் தோலுக்கு அலர்ஜிகள் ஏற்படுத்தாமல் வாசனைகள், நிறமிகள் இல்லாதவையாக பார்த்தும் வாங்கி பயன்படுத்துவது சிறப்பான பலனைத் தரும்.
இதையும் படிங்க: தலைமுடி கொட்டாமல் அடர்த்தியாக வளர ஆசையா ? இத பண்ணலாமே...