நமக்கு வரும் பல்வேறு விதமான நோய்களை இயற்கையாகவே சரி செய்து கொள்ள மூலிகைகள் பெரிதும் துணை புரிகின்றன. அதில் முக்கியமான இடத்தை பிடித்திருப்பது ஆவாரம் பூ. ஆவாரம் பூ, இலை, பட்டை, வேர் என அனைத்துமே நல்ல மருத்துவ குணம் கொண்டவையாகும். இதனை பொடி செய்து தேனீராகவும், சூரணமாகவும் பயன்பத்தலாம்.
நீரிழிவு கட்டுக்குள் வர;
இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால் சக்கரை வியாதி இளம் வயதினரை கூட எளிதில் தாக்கி வருகிறது. இதற்கு ஆவாரம் பூ சிறந்த தீர்வை தரும் என்றும் அதிலுள்ள sinnapsirin மற்றும் cardiac glucoside மூலக கூறுகள் இன்சுலின் சுரப்பை இயற்கையாக சுரக்கவைத்து சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. அன்றாடம் நம் சாலை ஓரங்களில் பூத்திருக்கும் ஆவாரம் பூவை பறித்து நன்கு காயவைத்து அதனை பொடி செய்து வைத்து கொண்டால் போதும். இதனை காலை மற்றும் மாலை வேளைகளில் ஒன்றரை டம்பளர் தண்ணீரில் 1ஸ்பூன் போட்டு நன்றாக கொதிக்க வைத்து பின்பு அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வந்தால் சக்கரை கட்டுக்குள் வரும். மூட்டுவலி, பாத எரிச்சல், மதமதப்பு, அதிக தாகம் மற்றும் சிறுநீரக கோளாறு சரி செய்யும் பண்பு இதற்கு உண்டு.
இதையும் படிங்க: செம்பருத்தி பூ கிடைச்சா மிஸ் பன்னாதீங்க

உடல் துர்நாற்றம், தோல் அரிப்பு நீங்க ;
பச்சை பயிரை ஊற வைத்து அதனுடன் சம அளவு ஆவாரம் பூ சேர்த்து அரைத்து அதனை உடல் முழுக்க தேய்த்து குளித்து வந்தால் உடலில் அரிப்பு நீங்கி பளபள மேனி கிடைக்கும்.
மாதவிடாய் கோளாறு நீங்க;
பெண்களுக்கு மாதவிடாய் வலி குறைந்து அதிக ரத்தப் போக்கை கட்டுப் படுத்தவும் ஆவாரம் பூவை பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.
குடல் புண் நீங்க ;
ஆவாரம் பூவை பச்சையாக சாப்பிட்டு வந்தாலே வயிற்றுப் புண் நீங்கி குடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி வயிறு சம்மந்தமான நோய்கள் விரைவில் சரியாகும்.

கல்லீரலை பலப்படுத்த ;
ஆவாரம் பூ தேநீரை தினமும் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை வராமல் இருக்கவும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் துணையாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க ;
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆவாரம் பூவை நேரடியாக சுடு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை குடித்து வந்தால் போதும். இது அவர்களுடைய கண் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாகும்.

சிறுநீரக கோளாறு நீங்க ;
ஆவாரம் பூவின் தேநீர் மற்றும் ஜூஸ் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் ஏற்பட்ட கோளாறு நாளடைவில் சரியாவதோடு, சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்கள் நீங்கும். அடிக்கடி சிறு நீர் கழிக்கும் உணர்வு கட்டுப்படும்.
ஆண்களுக்கு தரும் பயன்கள் ;
ஆவாரம் பூவை கருப்பட்டியுடன் சேர்த்து மணப்பாகு செய்து சாப்பிட்டு வந்தால் ஆண் குறியில் எரிச்சல் சரி செய்வதோடு , சொப்பனஸ்களிதம், மூத்திர ரோகமும் கட்டுக்குள் வரும்.
இவ்வளவு அற்புங்கள் செய்யும் ஆவாரம் பூவை நாம் சிறந்த முறையில் பயன் படுத்தி பலன் அடையலாம்.
இதையும் படிங்க: அடிக்கடி மறதி வருதா? அலட்சியம் வேண்டாம்... வைட்டமின் b12 குறைபாடாக இருக்கலாம்