பொடுகு தொல்லைக்கு நாம் கெமிக்கல் ஷாம்புவையே நாடி வருகிறோம், அதற்கு பதிலாக கற்றாழையை பயன்படுத்தி வந்தால் நல்ல தீர்வைத் தரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த முறைகளில் பயன்படுத்தலாம் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
கற்றாழையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக அதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்கள், வைட்டமின்-சி, வைட்டமின்- ஏ மற்றும் வைட்டமின்- ஈ தலையில் உள்ள எண்ணெய் பிசுக்கை அகற்ற உதவுகிறது. கற்றாழையை எலுமிச்சை சாறுடன் கலந்து முடிக்கு பயன்படுத்துவதன் மூலம் பொடுகு பிரச்சனையை நீக்கலாம். இதற்கு 5 முதல் 6 ஸ்பூன் கற்றாழை ஜெல், 1 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்ந்த கலவையை தலையில் விரல்களின் உதவியுடன் தடவலாம். பிறகு 1 மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பூ கொண்டு கழுவலாம்.

இதையும் படிங்க: மேக்கப் இல்லாமலே ஜொலிக்க ஆசையா ? - அப்போ கசகசா பயன்படுத்துங்க
கற்றாழையுடன் சமையல் சோடாவான பேக்கிங் சோடாவை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். இதற்கு 4-5 ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து உச்சந்தலையில் தடவி 20 நிமிடம் கழித்து முடியைக் கழுவலாம். இவ்வாறு வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் கூட பொடுகை விரட்ட பயன்படுகிறது. இவை இரண்டிலுமே பூஞ்சை காளான் மற்றும் பாக்டிரியாவை எதிர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளன என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. கற்றாழையுடன் 2 ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து அந்த கலவையை தலையில் தேய்த்து 30நிமிடம் ஊறவைத்து லேசான ஷாம்பூ கொண்டு அலசி வந்தால் பொடுகு மறைந்து போகும்.

வெறும் கற்றாழையை மட்டும் பயன்படுத்தினால் கூட பொடுகு தொல்லை இல்லாமல் போகும். கற்றாழை ஜெல்லை வெளியே எடுத்து முடி மற்றும் உச்சந்தலையில் தடவி சுமார் 1 மணி நேரம் கழித்து தலைமுடியை கழுவலாம். இவ்வாறு வாரத்தில் 2 முதல் 3 நாள்கள் தடவ வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் தலைமுடி அரோக்கியமாக இருப்பதுடன் முடி உதிர்வும் இல்லாமல் அடர்த்தியாக வளரும்.
தலை முடி வளர்ச்சிக்கு நல்ல உணவு பழக்கவழக்கங்கள், நல்ல உறக்கம், மன அமைதி, சுத்தமான காற்றும் முக்கிய பங்காற்றுகிறது. எனவே, மேற்குறிப்பிட்ட வீட்டு வைத்தியதோடு வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டால் தலைமுடி பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறந்த பழம் எது? - ஆப்பிளா? மாதுளையா ?