கல்லீரல் நம் உடலிலுள்ள உறுப்புகளில் மிகப் பெரியது என்று சொல்லலாம். கல்லீரல் பாதிக்கப்படும் போது மஞ்சள் காமாலை, வாந்தி, மயக்கம், உடல் நிறம் மாறுதல், பசியின்மை, கணுக்கால் வீங்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் மூலமாக அறிந்துகொள்ளலாம். கல்லீரல் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளை செரிமானம் செய்து அதிலிருந்து சக்தியை சேமித்து வைக்கிறது. நம் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி அதனை சிறுநீரகத்திற்கு அனுப்பி வைக்கும் பணியையும் செய்கிறது. நாம் பிறந்த நாள் முதல் இந்த பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

நம் செரிமான மண்டலத்தின் மிக முக்கிய உறுப்பான கல்லீரல் செரிமானத்துக்கு தேவையான பித்த நீரை சுரந்து உணவை எளிதாக செரிக்கச் செய்கிறது. அவ்வாறு செரிமானம் ஆன உணவில் இருந்து சக்தியை சேமித்து வைக்கிறது. இது நாம் உடல் நலம் பாதிப்படையும் போது சேமித்து வைத்த சக்திகளை கொண்டு உடலை இயங்கச் செய்கிறது. இவ்வாறு உடல் இயக்கத்திற்கு முக்கிய பங்காற்றும் கல்லீரல், மற்ற உறுப்புகள் போல அல்லாது தன்னை தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. 70 சதவீத கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் முறையான சிகிச்சைகள் மூலம் அதனை மீண்டும் புதுப்பிக்க முடியும். ஆனால் மற்ற முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், இதயம், கண், நுரையீரல் போன்றவையெல்லாம் உயிரையே பறித்துவிடும். கல்லீரல் பாதிக்கப்படும் போது உடனே அதற்கான மருத்துவத்தை செய்து பாதுகாத்தால் உடலிலுள்ள மற்ற உறுப்புக்களையும் அதன் செயல் பாடுகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: வைட்டமின் பி 12 குறைப்பாட்டால் நரம்பு தளர்ச்சி ஏற்படுமா ? எப்படி சரி செய்வது

கல்லீரலை பாதுகாக்கும் உணவுகளை அவ்வப்போது நாம் கடை பிடித்து வந்தாலே அதன் செய்லபாடுகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் மஞ்சள், வைட்டமின் சி நிறைந்த உணவுகள், காய்கறிகள் பிரதான இடத்தை பிடிக்கின்றன.நம் உணவில் மஞ்சளை காலம்காலமாக சேர்த்து வருகிறோம். அதனை சித்த, ஆயுர்வேதா மருத்துவத்தையும் தாண்டி சீன மருத்துவத்திலும் கூட பிரதான இடத்தை பிடித்துள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற மூலக்கூறுகளை பிரித்து எடுத்து அலோபதி ஆங்கில மருத்துவத்தில் எண்ணற்ற நோய்களுக்கு மறந்து செய்ய பயன் படுத்தப்படுகிறது. மஞ்சள் நம் கல்லீரலில் கொழுப்பு சேர்வதை கட்டுப்படுத்துவதாக ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். எனவே உணவில் நாம் சேர்க்கும் மஞ்சள் செய்யும் நன்மைகள் நிச்சயம் நம்மை வியப்படையச் செய்யும். மஞ்சள் இரண்டு சிட்டிகை விட்டு பாலில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் நுரையீரல் மற்றும் கல்லீரலுக்கு நல்லது. மேலும் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 டம்பளர் தண்ணீரில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் கொதிக்கவைத்த எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் சேர்த்து நீரில் தேன் கலந்து பருகி வரலாம்.

வைட்டமின் சி சத்துக்கள் அதிகமுள்ள நெல்லிக்காய் தினமும் சாப்பிட்டு வரலாம். அதிலுள்ள சத்துக்கள் கல்லீரல் கழிவுகளை சுத்தம் செய்கிறது. காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சூஸ் செய்து அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். காய்ந்த நெல்லிக்காய் வற்றலை வெறும் வாயில் போட்டு ஊற வைத்து அவ்வப்போது சாப்பிட்டு வரலாம். முதல் நாள் இரவு நான்கு நெல்லிக்காயை வெட்டி இரண்டு டம்பளர் தண்ணீரில் ஊற வைத்து அதனை மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர இரத்தம் சுத்தமாகும்.

கீழாநெல்லி செடிகளை வேரோடு பிடுங்கி அதனை நன்றாக அலசியெடுத்து, மோர் சேர்த்து அரைத்து அதனை வடிகட்டி வெறும் வயிற்றில் 1டம்பளர் குடித்து வரவேண்டும். இது நாள் பட்ட மஞ்சள் காமாலை, கல்லீரல் செயலிழப்பு போன்றவைகளுக்கு தினமும் காலையில் 40 நாட்கள் அல்லது நோய் தீரும் வரை குடித்தால் கல்லீரல் புதுப்பிக்கப்பட்டு பலப்படும். எக்காரணம் கொண்டும் அசைவ உணவுகளை எடுக்க வேண்டாம்.

தினமும் நார்சத்து, நீர்சத்து நிறைந்த காய்கறிகள், வைட்டமின் சி சத்துக்கள் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, திராட்சை, அன்னாசி போன்ற பழவகைகள் சாப்பிட்டு வர கல்லீரலை பாதுகாக்கலாம். கல்லீரல் நோய் பாதிப்பு உள்ளவர்கள் கீரை வகைகளை தவிர்ப்பது நல்லது. மது தொடவே கூடாது.