முட்டை சாப்பிடும் சிலர் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்துக்கொள்வார்கள். மஞ்சள் கருவைச் சாப்பிடமாட்டார்கள். அதில் கொழுப்பு அதிகம் என்று காரணம் சொல்வார்கள். உண்மையில் முட்டையில் கொழுப்பு அதிகமாக இருக்கிறதா?
முட்டையின் வெள்ளைக் கரு முழுவதும் புரதம், மஞ்சள் கரு முழுவதும் கொழுப்பு என்று பலரும் நினைக்கிறார்கள். வெள்ளைக் கரு, மஞ்சள் கரு இரண்டிலும் கிட்டதட்ட ஒரே அளவுக்குத்தான் புரதம் இருக்கிறது. மஞ்சள் கருவையும் சேர்த்து எடுத்துக்கொண்டால்தான் அதிலிருக்கிற புரதம் முழுவதுமாக உடலுக்குக் கிடைக்கும்.

அப்படியெனில், முட்டையில் கொழுப்பு இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம். 100 கிராம் முட்டையில் 10 கிராம் கொழுப்பு இருக்கிறது. இதில் கெடுதல் என்று சொல்லப்படுகிற நிறை கொழுப்பு 3.2 கிராம்தான். பலன் தரும் என்று நினைக்கிற நிறைவுறாக் கொழுப்பு 6.8 கிராம்.
இதில்கூட உடலுக்கு நன்மை சேர்க்கும் ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு நான்கு கிராம். மனித உடலுக்குக் கொழுப்பு தினமும் 40 கிராம் வரை தேவை. ஆக, முட்டையில் இருக்கும் கொழுப்பு உடலுக்கு வலு சேர்க்கும் என்பதே உண்மை.
இதையும் படிங்க: கொழுப்புச் சத்தை உணவுகள் மூலம் எப்படி குறைக்கலாம்.? இதோ பட்டியல்..!
மனிதர்களின் அன்றாடப் பணிகளுக்குத் தினமும் 2,000 மி.கிராம் கொலஸ்டிரால் தேவை. எனவே, முட்டையில் இருக்கும் கொலஸ்டிரால் குறித்து அதிகமாக அச்சப்படத் தேவையில்லை என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
இதையும் படிங்க: மாரடைப்பு ஏற்படும் சில வாரங்களுக்கு முன் என்னென்ன அறிகுறிகள் தோன்றும்.? மிஸ் பண்ணக் கூடாத அறிகுறிகள்.!