பெண்களுக்கு முகத்தில் உதட்டின் மேல் மீசைப் போன்றும், தாடைகளிலும் முளைத்தால் அது பெரிய கவலையாக மாறி விடுகிறது. இந்த அதிகப்படியான முடி வளர்ச்சி வெளியில் செல்லவே தயங்கும் அளவுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கி விடுகிறது. இதனால் நாம் ஷேவிங், வாக்ஸிங், டிவீசர், கடைகளில் விற்கும் கிரீம்கள் கொண்டு முடியை அகற்றி வந்தாலும் அது தற்காலிக தீர்வே தவிர, மேலும் வளர்ந்து கொண்டே தான் செல்லும். இதற்கு முக்கிய காரணமே ஆண்ட்ரஜன் என்னும் ஹோர்மோன் சுரப்பது தான்.

இந்த ஹார்மோன் நாம் பருவமடைந்த சமயத்தில் இருந்தே சுரக்க ஆரம்பிக்கும். ஆனால் இது ஆண்களுக்கு அதிகமாக சுரக்கும் அதன் விளைவாகவே கை, கால், முகத்தில் மீசை, தாடி என ரோமங்கள் வளர காரணமாக உள்ளது. பொதுவாக பெண்களுக்கு இந்த ஹார்மோன் மிக குறைவான அளவே சுரக்கும். சில காரணங்களால் ஹார்மோன் சுரப்பு தூண்டப்படும் போது அது முகத்தில் முடி வளர்ச்சியை உண்டாக்கிறது. நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அதனால் சாப்பிடக்கூடிய மாத்திரைகளால் கூட இந்த ஹோர்மோன் தூண்டப்படுகிறது. கருப்பை கட்டிகள், கருப்பையில் பிரச்சினைகள், மெனோபாஸ் சமயங்களிலும் இந்த ஹார்மோன் சுரக்கப்பட்டு முடி வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது. உதட்டின் மேலே, தாடை, காது ஓரங்களில் ஆண்களை போன்று லேசாக முடிவளரலாம். இது லேசாக இருந்தால் பயப்படத் தேவையில்லை, அடர்த்தியாக பிறர் கண்ணுக்கு தெரியும் அளவு இருந்தால் தான் கவலை பட வேண்டும். இதனை செயற்கை முறையில் அகற்றாமல் இயற்கையான முறையில் அகற்றி வந்தாலே சிறப்பான பலனை பெறலாம்.
இதையும் படிங்க: கருப்பா இருக்க நீங்க கலரா மாறணுமா ? இதை மட்டும் செய்யுங்க

சிறு குழந்தைகளுக்கு மஞ்சளை தேய்த்து நம் முன்னோர்கள் குளிக்க வைப்பார்கள் அது சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு தோலை பாதுகாப்பதோடு, தேவையற்ற ரோமங்களின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கும். மஞ்சளை எலுமிச்சை சாறு கொண்டு இழைத்து அதனை முகம் மற்றும் தாடைகளில் தொடர்ந்து பூசி வர, முடியின் அடர்த்தியை நாளடைவில் குறைத்து பின்பு மறையச் செய்யும். ஆரம்பத்தில் இது பலன் அளிக்கவில்லையே என்று பின்பற்றாமல் இருப்பதை விட தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். பகலில் தேய்த்து வெளியில் செல்ல பிடிக்கவில்லையென்றால் இரவில் தேய்த்து வரலாம். இதுகண்டிப்பாக நல்ல பலனைத் தரும்.

எலுமிச்சை சாறு உடன் சக்கரையை தொட்டு முடி முளைத்துள்ள பகுதிகளில் வட்ட வடிவில் தேய்க்க வேண்டும். இரண்டு முதல் ஐந்து நிமிடம் வரை தொடர்ந்து செய்து மீண்டும் அரை மணி நேர இடைவெளியில் மீண்டும் செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 5 முறை செய்து பின்பு ஒரு காட்டன் பஞ்சை பன்னீரில் நனைத்து துடைத்து எடுத்து விடவும். முடியின் வேர்க்கால்களை பலவீனமடையச் செய்து முடி விரைவில் உதிர்ந்துவிடும். இதனை வாரம் மூன்று முறை செய்யலாம்.

முட்டை வெள்ளை கரு 1ஸ்பூன், அதனுடன் கடலை மாவு, சக்கரை சிறிதளவு சேர்த்து குழைத்து அதனை முடி முளைத்த இடங்களில் தேய்த்து அப்படியே காய விடவேண்டும். அரை மணி நேரம் கழிந்து அது காய்ந்து இறுகி இருக்கும். இப்போது அதனை பொறுமையாக உரித்து எடுத்தால் அந்த காய்ந்த பகுதியுடன் சேர்ந்து முடிகளும் வந்துவிடும். கற்றாழை ஜெல் கொண்டு அந்த பகுதிக்கு லேசாக மசாஜ் கொடுத்தால் சிவந்து போகாது.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய கோரைக்கிழங்கு பொடி, பூலாங்கிழங்கு பொடி, கஸ்தூரி மஞ்சள் பொடி, குப்பை மேனி பொடி இவற்றை நன்றாக கலந்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து முடி வளர்ந்த இடங்களில் தடவி காயவிடவும். 30 நிமிடம் கழித்து தண்ணீர் தெளித்து ஒரு காட்டன் துணியில் அழுத்தி துடைத்தால் முடிகள் அனைத்தும் அதில் வந்துவிடும். இவ்வாறு வாரம் இருமுறை என தொடர்ந்து செய்து வந்தால் முடி வளர்ச்சி படிப்படியாக தடைபட்டு ஒரு கட்டத்தில் இல்லாமல் போகும்.
எனவே பெண்கள் செயற்கை வழிகளை விடுத்து இது போன்ற பாதுகாப்பான வழிகளில் முகத்தில் வளரும் முடிகளை இயற்கையாக கட்டுப்படுத்தி அதனை முற்றிலும் அகற்றலாம்.
இதையும் படிங்க: தயிர் ஒன்னு இருந்தாலே போதும், ஸ்கின்னு சும்மா மின்னும்...