ஒரு வீட்டில் இருளை நீக்கி நல்ல வெளிச்சத்தை கொடுக்கவே நாம் தீபம் ஏற்றுகிறோம். அது போல நாம் கோயி்லில் இறைவன் முன்னிலையில் ஏற்றும் தீபம் நம் மனதில் இருக்கும் கன்மம், மாயை, ஆசையாகிய இருளை அகற்றி ஞான ஒளியை கிடைப்பதற்காக. ஆக தீபம் என்பது நம் அறியாமையை நீக்குவதற்கும் ஞானத்தை பெருக்குவதற்கே ஆகும். அந்தவகையில் நாம் எளிமையான முறையில் ஒரு மண் விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி விட்டு விளக்கு ஏற்றுவது பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது. இது பஞ்ச பூத தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.
நம் நாகரிகம் வளர வளர காமாட்சி விளக்கு, கஜலட்சுமி விளக்கு, குத்து விளக்கு என நம் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் புது புது விதங்களில் பயன்படுத்தி வந்தோம். அந்தவகையில் வெற்றியை தரும் வெற்றிலையைக் கொண்டு விளக்கு ஏற்றுவது சமீப காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
பொதுவாக வெற்றிலை சுப நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பொருள். இறைவன் முன் படைக்கும் நெய்வேத்தியத்திற்காகவும் , தாம்பூலம் பரிமாறுவதற்கு நாம் பயன் படுத்தி வந்தோம். அதனை வைத்து விளக்காக யார்யாரெல்லாம் ஏற்றலாம்?
இதையும் படிங்க: பணப்புழக்கம் அதிகரிக்கணுமா? படிகாரம் உதவியா இருக்கும்

நாம் செய்யும் தொழில் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வரும் போது, கணவன் மனைவி உறவில் விரிசல், குழந்தைகள் படிப்பில் மந்தமாக இருப்பது, நிலம் வீடு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு முருகப்பெருமானின் உகந்த நாளான செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை, மதியம் 1மணி முதல் 2 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை இதில் ஏதாவது ஒரு நேரத்தில் விளக்கை ஏற்றலாம். இது குறைந்தது ஒன்பது வாரங்கள் ஏற்ற வேண்டும்.
ஒரு தட்டில் ஆறு வெற்றிலை, அதன் மேல் சந்தானம், குங்குமம், பூ வைத்து ஒரு அகல் விளக்கை நடுவில் வைத்து பஞ்சு திரி இட்டு நெய் ஊற்றி ஏற்றி வந்தால் வெற்றி நிச்சயம், நினைத்தது நடக்கும். கிழக்கு அல்லது மேற்கு திசையை பார்த்து தீபம் எரிய வேண்டும்.
முருகனுக்கு பிடித்தமான தினை மாவும் தேனும் சேர்த்து லட்டு செய்து நெய்வேத்தியம் இட்டு விரதம் இருந்தால் கூடுதல் சிறப்பான பலனை பெறலாம். முருகனுக்கு உகந்த நாட்களான சஷ்டி மற்றும் கிருத்திகை நாட்களிலும் ஏற்றி வரலாம்.

மஹாலக்ஷ்மி அனுக்கிரகம் பெற்று குபேர யோகம் பெற வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் வெற்றிலை நெய் தீபம் ஏற்றலாம். கிழக்கு அல்லது மேற்கை பார்த்து தீபம் எரிய வேண்டும்.
பழம், பூ, கற்கண்டு நெய்வேத்தியம் வைத்து விருதம் இருக்க முடிந்தால் மேலும் சிறப்பான பலனைப் பெறலாம். இது குறைந்தது 9 வாரங்கள் ஏற்றலாம்.

சனி தோஷம் நீங்க, சனி திசையில் அமைதி நிலவ, ஏழரை சனியில் நிலவும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆஞ்சநேயர் பெருமானுக்கு சனிக்கிழமைகளில் ஒன்பது வெற்றிலையை க்கொண்டு தீபம் ஏற்றலாம். வெற்றிலையை மாலையாகவும் போட்டு வணங்கி வரலாம்.
வெற்றிலை தீபம் வீடுகளிலும் கோயில்களிழும் தாராளமாக ஏற்றி நாம் பயன் பெற்று வரலாம்.
இதையும் படிங்க: பணப்புழக்கம் அதிகரிக்கணுமா? படிகாரம் உதவியா இருக்கும்