திருப்பதி ஏழுமலையான் கோவிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அகல் விளக்குகளை கொண்டு, கோவிலை அலங்கரித்து பிரகாசகிக்க செய்தனர்.
ஒவ்வொரு நாளும், திருமலை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிலும் பண்டிகை காலங்கள் என்றால், கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானுக்கு அகல் தீபம் போட்டு வழிபட்டுள்ளனர். இது குறித்த சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
இது மார்கழி மாதம் என்பதால், திருமலையில் கடும் குளிர் நிலவி வருகிறது ஆனால், குளிரை பொருட்படுத்தாமல் பக்கதர்கள், சிலர் கார்த்திகை தீபத்திற்காக தங்களின் பிரார்த்தனையை செலுத்தும் விதத்தில் கைகளில் பெரிய அகல்களில் விளக்கேற்றி கொண்டு, படிக்கட்டில் நடந்தே சென்று நேர்த்தி
கடனை செலுத்தினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளக்குகளால் திருமலை மின்னிய நிலையில்... பலர் படிக்கட்டில் அகல்கள் ஏற்றி வழிபட்டனர்.
மேலும் கார்த்திகை தீபம் அன்று மட்டும், சுமார் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதே போல் அன்று ஓரே நாளில் மட்டும் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கார்த்திகை தீபம் அன்று மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு வந்த காணிக்கை தொகை ரூ.3 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.
பொதுவாக படிக்கட்டில் நடந்து வரும் பக்தர்கள் உடனுக்குடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க படுவார்கள். ஆனால் தீப திருநாள் அன்று கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் வந்தவர்கள், மற்றும் மாற்று திறனாளிகள் கூட ஏழுமலையானை தரிசிக்க 2 மணி நேரம் ஆனதாக கூறப்படுகிறது. அதே நேரம் கோவிலை சுற்றி ஏற்றி வைக்கப்பட்டிருந்த அகல் ஒளியில் திருப்பதி கோவிலின் பிரகாரம் தங்கம் போல் பிரகாசித்ததாக மனமுறுகிய பக்தியோடு கூறுகிறார்கள் பக்தர்கள்.