இந்திய சந்தையில் வெஸ்பா (Vespa) தனது 2025 லைன்அப்பை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இந்த முறை வெஸ்பா ஸ்கூட்டர்களில் புதிய தொழில்நுட்பங்களை இணைத்துள்ளது முக்கிய சிறப்பு ஆகும். மேலும், ஸ்பெஷல் எடிஷன் மாடல்கள் வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய Vespa மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹1.32 லட்சம் முதல் ₹1.96 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சாரமாக மற்றும் சக்திவாய்ந்த என்ஜினை வழங்குவதன் மூலம் வெஸ்பா தொடர்ந்து முன்னணியில் உள்ளது. 2025 Vespa மற்றும் Vespa S மாடல்கள் 125cc மற்றும் 150cc என்ஜின் ஆப்ஷன்களுடன் வந்துள்ளன.

இவை இரண்டும் மேம்பட்ட செயல்திறன் மற்றும் சக்தியை வழங்குகின்றன. 125cc என்ஜின் 9.5hp பவரும் 10.1Nm டார்க்கும் தரும். அதேசமயம், 150cc என்ஜின் 11.4hp பவரும் 11.66Nm டார்க்கும் வழங்குகிறது, ஓட்டுநர்களுக்கு சிறந்த அனுபவத்தைத் தரும். வெஸ்பா ஸ்கூட்டர்கள் பல்வேறு வண்ணங்களுடன் கிடைக்கின்றன.
இதையும் படிங்க: 11 ஏர்பேக்குகள்.. 502 கிமீ ரேஞ்ச்.. ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. அசத்தும் BYD மின்சார கார்
வெஸ்பா மாடல்களுக்கு Verde Amabile, Rosso Red, Pearl White, Nero Black, Azzurro Provenza, Blue & Pearl White, Orange & Pearl White போன்ற நிறங்கள் உள்ளன. Vespa S மாடலில் கூடுதல் விருப்பமாக Oro ஸ்பெஷல் எடிஷன் (தங்க நிறத்துடன்) அறிமுகமாகியுள்ளது.
Vespa S மாடல்களின் வண்ணங்கள் Oro, Pearl White, Nero Black (Matte), Verde Ambizioso (Matte), Giallo Yellow (Matte), Arancio Impulsivo, Red & Pearl White, Black & Pearl White என வழங்கப்பட்டுள்ளன. புதிய வெஸ்பா ஸ்கூட்டர்களில் சமீபத்திய தொழில்நுட்ப வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, கீலெஸ் இக்னிஷன் மற்றும் புதிய TFT இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கிளஸ்டரில் பல் விதமான தகவல்களை பெறலாம். மேலும், புளூடூத் இணைப்பு மற்றும் நெவிகேஷன் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. வெஸ்பா தனது பாரம்பரிய கிளாசிக் ஸ்டைல் தோற்றத்துடன் புதிய மாடல்களை உருவாக்கியுள்ளது.
இவை, குடும்பங்களுக்கும் இளைய தலைமுறைக்கும் ஏற்ற மாதிரியாக இருக்கின்றன. ஸ்டைலிஷ் வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் Vespa-வை தனிப்பட்ட முறையில் பிரபலமாக்குகின்றன. அதிக விலையில் இருக்கும் Vespa ஸ்கூட்டர்கள், மற்ற பிராண்டுகளுடன் போட்டியிடும் போது விற்பனை அதிகரிக்குமா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.
வெஸ்பா ஸ்கூட்டர்கள் பெரும்பாலும் பிரீமியம் விலை நிலையை கொண்டிருப்பதால், இது வெகுஜன விற்பனைக்கு இடமளிக்காது. இருப்பினும், அதன் பிரீமியம் தோற்றம் மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் Vespa-வின் தனித்தன்மையை நிலைநிறுத்தும்.