ஓசூரில் 11 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 அரசுப்பள்ளி மாணவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஓசூர் பகுதியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமி அவர்கள் வீடு அமைந்திருக்கும் தெருவில் சிறுமிகளோடு விளையாடி உள்ளார். அப்போது சிறுமிக்கு தாகம் எடுக்கவே உடன் விளையாடிய ஒரு சிறுமியிடம் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுமி தனது வீட்டிற்கு சென்று தண்ணீர் குடித்து வருமாறு கூறியுள்ளார்.

அதனை நம்பி தண்ணீர் குடிக்க சென்ற சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ஓசூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9, 10, 11 ஆம் வகுப்புகளில் படிக்கக்கூடிய 14,15,16 வயது நிரம்பிய மாணவர்கள் பாலியல் சீண்டல் மற்றும் துன்புறுத்தல் செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி நடந்த சம்பவங்கள் குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இதெல்லாம் வெட்கமா இல்லையா? - அரசு மருத்துவமனைக்கு நடந்த அவலத்தால் கொதித்தெழுந்த எடப்பாடி பழனிசாமி!
. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மை என தெரிய வந்ததையடுத்து சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அரசு பள்ளி மாணவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களும் சிறுவர்கள் என்பதால் சேலத்தில் உள்ள கூராய்வு மையத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் தற்போது அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை; போதை ஆசாமியை கொத்தாக தூக்கிய போலீஸ்!