"எஸ் சி , எஸ் டி பட்டியல் இனத்தவர்கள் ஒரே மாதிரியான பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் உட்பிரிவை வகைப்படுத்த அனுமதிக்க முடியாது" என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் கடந்த 2004 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டில் ரத்து செய்தது. 7 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பில், "சமூக ரீதியாக, கல்வி ரீதியாக மிகவும் பின்தங்கி இருப்பவர்களின் மேம்பாட்டுக்காக பட்டியல் இன சமூகத்தவர்கள் உட்பிரிவுகளை வகைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு" என்று, அந்த தீர்ப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதி கே. ஆர்.கவே, இந்த வழக்கில் தனியாக ஒரு தீர்ப்பை வழங்கினார். அதில் "எஸ்சி, எஸ்டி பிரிவினரில் இட ஒதுக்கீடு காரணமாக ஏற்கனவே பயனடைந்து முன்னேறிய வசதி படைத்த (கிரிமினல் லேயர்) பிரிவினரை கண்டறிந்து, அவர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீட்டு சலுகையை மறுக்கும் வகையில் மாநில அரசுகள் கொள்கையை வகுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து, "அரசியல் சாசன அமர்வின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்தும், அது தொடர்பாக எந்த மேல் நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அதனால் "கிரீமி லேயர்"களை அடையாளம் காணும் கொள்கையை அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்த வேண்டும்" என்று பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: " சட்டம் இயற்றப்பட்ட பிறகும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

இந்த மனுக்கள், பி ஆர் கவே மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகிய இரு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது நீதிபதி கவே, "கடந்த 75 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டு சலுகையால் பயனடைந்து மற்றவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு முன்னேறியவர்களை இட ஒதுக்கீடு சலுகையில் இருந்து நீக்க வேண்டும் என்ற எங்கள் கருத்தை தெரிவித்து இருந்தோம். ஆனால் இது குறித்து மாநிலஅரசு நிர்வாகமும் சட்டமன்றமும் தான் முடிவு செய்ய வேண்டும்"என தெரிவித்தார்.
நீதிபதியின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆணையத்திடமே இது குறித்து முறையிட இருப்பதாகவும் எனவே மனுவை திரும்ப பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் படியும் மனுதாரர்கள் கேட்டுக் கொண்டனர். இதற்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினார்கள்.
இதையும் படிங்க: நீதிமன்றமா-மத்திய அரசா?: தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்