தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை விமர்சிக்கும் விதமான ஜான் ஆரோக்கியசாமி பேசிய 2வது ஆடியோ வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குறித்து பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. அந்த ஆடியோவில் கட்சியின் தலைவரான விஜய்யை பெரிதுபடுத்திக் காட்டாமல், தொண்டர்கள் புஸ்ஸி ஆனந்தைக் கொண்டாடுவதாகவும், இப்படியே போனால் கட்சி 2 சதவீத வாக்குகளைக்கூட வாங்காது என்றும் பேசியிருந்தார்.
இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தை ரசிகர் மன்றம் போல புஸ்ஸி ஆனந்த் தனது கைக்குள் வைத்திருப்பதாகவும், அனைத்து முடிவுகளையும் அவரே எடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே, தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், கட்சி மீது வேண்டுமென்றே அவதூறு பரப்ப திட்டமிடுவதாகவும், தொண்டர்கள் எதையும் நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: மாற்றம் முன்னேற்றம்... விஜய் தேர்வு செய்த 3 இடங்கள்... தொண்டர்கள் உற்சாகம்,.. ஆட்சியாளர்களுக்கு தலைவலி

இதனால் தவெகவில் சற்றே சலசலப்பு அடங்கியிருந்த நிலையில், மீண்டும் ஜான் ஆரோக்கியசாமி பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவின் தொடக்கத்திலேயே, “மேடமை வச்சி ட்ரை பண்ணாரு. ஆனா அவங்க இதுக்குள்ள எல்லாம் வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க” எனக்கூறியுள்ளார். ஜான் ஆரோக்கியசாமி சொல்லும் மேடம் அவங்களா இருக்குமோ, இவங்களா இருக்குமோ என குழப்பிப்போன தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் இப்போது யார் அந்த மேடம்? என கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர். அடுத்ததாக புஸ்ஸி ஆனந்திற்கு புதுச்சேரி முதல்வராக வர வேண்டும் என ஆசை என்றும், அவர் தான் மட்டுமே விஜய்க்கு எல்லாம் என நினைத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
⚡️⚡️Exclusive ⚡️⚡️
Audio Part 2
*புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி முதலமைச்சராக ஆசை.
*விஜய்க்கு எல்லா தீய பழக்கங்களும் உண்டு
*நாங்கள் ரகசியமாக பகிர்ந்து கொள்வதை வெளியில் கசிய விடுகிறார் புஸ்ஸி ஆனந்த் pic.twitter.com/nO4ZsmsTgT
— Tiruchi Suriyaa (@TiruchiSuriyaa) January 13, 2025
தொடர்ந்து பேசிய ஜான் ஆரோக்கியசாமி, விஜய்க்கு எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு” என தமிழக வெற்றிக் கழக தலைவரையே தரக்குறைவாக பேசியிருக்கிறார், தொடர்ந்து பேசிய அவர், உட்கட்சிக்குள் ஆலோசிக்கப்படும் விவகாரங்களை புஸ்ஸி ஆனந்த் வெளியே கசியவிடுவதாகவும், தவெக மாநாட்டிற்கு பிறகு போதை ஒழிப்பு குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வு திட்டமிட்டிருந்தோம். ஆனால் அடுத்த நாளே கஞ்சா வழக்கில் தவெக நிர்வாகி கைது என செய்தி வருகிறது. ஒரு அறைக்குள் தவெக தலைவர் விஜய், புஸ்ஸி ஆனந்த், நான் மட்டுமே விவாதித்த விவகாரம் எப்படி வெளியே சென்றது எனக்கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இந்த ஆடியோ சோசியல் மீடியாவில் புயலைக் கிளப்பி வருகிறது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைதேர்தல்...வாய்ப்பை தவறவிட்ட அதிமுக...