திமுகவின் தேர்தல் வாக்குறுதியான கல்வி கடன் ரத்து திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை நடந்த பல்வேறு தேர்தல்களில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என திமுக, அதிமுக, பாமக, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்ததை சுட்டிக்காட்டி திருப்பூரை சேர்ந்த மணிமாறன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதையும் படிங்க: அண்ணாமலையைக் கண்டாலே திமுகவுக்கு அல்லுவிடும்... தெறிக்கவிட்ட டிடிவி தினகரன்...!

அந்த மனுவில், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளித்த கல்வி கடன் ரத்து என்ற தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற படவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மகள் 2லட்சத்து 75ஆயிரம் ரூபாய் கல்வி கடன் பெற்று பொறியியல் படிப்பை முடித்த போதும் இதுவரை வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும், கல்வி கடனை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீராம், மற்றும் நீதிபதி முகமது சபிக் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் MLA கருப்புசாமி பாண்டியன் மறைவு !