நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டில் புகுந்து பாதுகாவலர் மற்றும் சம்மனை கிழித்த ஊழியர் ஆகியோரை கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் யார் என்பது குறித்து இணையத்தில் தகவல் வைரலாகி வருகிறது. இவர், முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்டபோது, அவருடன் உயிரிழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மகன் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
1991ல் திருப்பெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலமாக ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது, கூடவே 16 பேரும் கொல்லப்பட்டார்கள். அதில் பாதுகாப்புக்கு சென்றிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் ஒருவர். அந்த ராஜகுருவுக்கு அப்போது 16 வயதில் ஒரு மகன் இருந்தார். 34 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில் அந்த மகனும் இப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர். நீலாங்கரை காவல்நிலையத்தில் பணிபுரியும் பிரவீன் ராஜேஷ்தான் அவர்.

''ஆமாண்டா, ராஜீவ்காந்தியை நாங்கதாண்டா போட்டோம் என்று மேடையிலேயே மார்தட்டிய சீமான் வீட்டில் இன்று ‘சம்பவம்’ செய்தவர் அவர்தான். தபால்காரரைப் போல மாஜிஸ்திரேட் செயல்படக் கூடாது: இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட் கடும் கண்டனம்
காமதேனு
இதையும் படிங்க: சம்மனை கிழிக்கச் சொன்னது யார்?... சீமானின் வழக்கறிஞர் பரபர விளக்கம்.!
2021ல் வடபழனி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த இதே இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ், கொரோனா ஊரடங்கு காலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக பெண் வழக்கறிஞரின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இதற்கு பிரவீன் ராஜேஷை பழி வாங்க அந்த பெண் வழக்கறிஞர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ப்ரவீன் ராஜேஷ் மீது வழக்குத் தொடர்ந்தார். வழக்கு பதிவு விருகம்பாக்கம் போலீஸார் மறுத்ததால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் ந்த பெண் வழக்கறிஞர். சைதாப்பேட்டை நீதிமன்றமும் பிரவீன் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ப்ரவீன் ராஜேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ''கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர், தன் கணவருடன் முகக்கவசம் அணியாமல் டூவீலரில் சென்றார். அவர்களை முகக்கவசம் அணியுமாறு போலீஸார் வழி மறித்து கூறினர். இதனால், அவர்கள் வாக்குவாதம் செய்ததால், வழக்கறிஞரின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தேன். இதனால். என்னைப் பழிவாங்குவதற்காக போலீஸார் தாக்கியதாக விருகம்பாக்கம் போலீஸில் அவர் புகார் செய்தார். இந்த புகாரை விசாரித்த உதவி கமிஷனர், புகார் உள்நோக்கமானது என்று கூறி அதை முடித்து வைத்தார். இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதன் அடிப்படையில், என் மீது விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதவி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
2022ல் இந்த வழக்கில் இருதரப்பு வாதங்களையம் கேட்டறிந்த நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், போலீஸார் தாக்கியதற்கு ஆதாரமாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வழங்கியதாக மருத்துவச் சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் புகார்தாரர், அவரது கணவர் தாக்கப்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அது பராசிட்டமால், வைட்டமின் மாத்திரைகளை வாங்க டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து சீட்டுதான். அதைகூட பார்க்காமல், இயந்திரத்தனமாக சைதாப்பேட்டை நீதிமன்ற மாஜிஸ்திரேட் வழக்குப்பதிவு செய்ய உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆவணங்களைச் சரியாக பரிசீலிக்காமல், புகார் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டு, தபால்காரரை போல மாஜிஸ்திரேட்டு செயல்படக் கூடாது.

அதுமட்டுமல்ல பிரச்சினை வடபழனி போலீஸ் நிலைய எல்லைக்குள் நடந்துள்ளது. அப்படி இருக்கும்போது விருகம்பாக்கம் போலீஸ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று மாஜிஸ்திரேட் எப்படி உத்தரவிட முடியும்? குற்ற வழக்குப்பதிவு செய்வது என்பது சாதாரணமானது இல்லை. அது ஒரு தனி நபரின் உரிமையை பாதிக்கும், அதுமட்டுமல்ல சில நேரங்களில் ஒருவரது தொழிலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இதுபோல புகார் மனு தாக்கல் செய்யும்போது, அதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். அதன்பின்னர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். அதுபோல் மாஜிஸ்திரேட் செயல்படாமல், நேரடியாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, இந்த புகார் இன்ஸ்பெக்டரை பழிவாங்குவதற்காக என்று நன்றாக தெரிகிறது. இந்த புகாரை விசாரணைக்கு மாஜிஸ்திரேட் ஏற்று இருக்கக்கூடாது. ஒருவேளை புகார்தாரர் கூறும் குற்றச்சாட்டு அனைத்தும் உண்மை என்று கருதினாலும், கரோனா பரவலைத் தடுக்கத்தான் இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளார். அவர் அதிகாரியாக பணி செய்துள்ளதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
எனவே, மனுதாரர் இன்ஸ்பெக்டருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய விருகம்பாக்கம் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்ட சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி தீர்ப்பளித்து இருந்தார்.
இதையும் படிங்க: அந்தப் பொம்பளைய இங்கே கூட்டிட்டு வா..! நான் வருகிறேன்… கொந்தளிக்கும் சீமான்..!