திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் காவல்துறையினர் சம்மனை ஒட்டிச் சென்றனர்.

இதனிடையே, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்ததாக அவரது பணியாளர் சுபாகர் மற்றும் பாதுகாவலர் அமல்ராஜ் ஆகியோரை நீலாங்கரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: காமராஜருக்கு பதில் கருணாநிதி பெயரை சூட்டுவதா..? காமராஜருக்கு நிகராக ஒரு முதல்வர் உண்டா..? திமுக அரசை விளாசிய சீமான்!
இந்த சம்பவம் தொடர்பாக ஆயுத தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமல்ராஜ் மற்றும் சுபாகர் இருவரும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதனையடுத்து இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் அரசியல் நோக்கில் தாங்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும், காவல்துறை கூறிய குற்றச்சாட்டு அனைத்தும் தவறனானது. துப்பாக்கிக்கு உரிய அனுமதி இருப்பதாகவும் எனவே ஆயுத தடுப்பு சட்ட பிரிவில் கைது செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தவர்கள் தமிழகத்தின் பகைவர்கள்... பாஜக, நாதக கட்சிகளை போட்டுத் தாக்கிய திமுக!