சோழவந்தான் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் எடப்பாடி தான் முதல்வராக இருப்பார் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக செயல்படுங்கள் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, ஆடு நனையுது என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாக உள்ளது. முதலமைச்சர் ஏன் எங்களைப்பற்றி பேசுகிறார்? திமுக - வினர் அதிமுக மீது கரிசனம் காட்டுவது ஏமாற்று வேலை.திமுக கூட்டணியில் உள்ளவர்கள் தவறாக பேசினால், தவறாக பேச வேண்டாம் என்று சூட்கேஸை எடுத்துக் கொண்டு உடனே செல்கிறார்கள்.இதைக் கேட்டால் கொள்கை கூட்டணி என்று சொல்கிறார்கள். சூட்கேஸ் கூட்டணி போல தான் உள்ளது என்றார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் தவெக vs திமுகவிற்கும்தான் போட்டி: விஜய் பேச்சுக்கு இ.பி.எஸ் கொடுத்த ரியாக்ஷன்.!

திமுகவை விஜய் விமர்சிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புதிதாக கட்சியை தொடங்கியுள்ளார். அதனால் அப்படி கூறி வருகிறார், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றும் மக்களோடு மக்களாக இருக்கின்றோம் என்பது தம்பி விஜய் க்கு தெரியும்.அதனால் தான் அவர் எங்களை சொல்லவில்லை.திமுக எப்படி வேஷம் போடுகிறது என்று நாங்கள் சொல்வதை தான் அவர் சொல்லியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும், எடப்பாடி தான் முதலமைச்சர், அதில் அதிமுக உறுதியாக உள்ளது, கூட்டணி குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி முடிவெடுப்பார் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இ.பி.எஸை 3ம் இடத்துக்கு தள்ளிய விஜய்..! இப்போது தேர்தல் நடந்தால் தமிழகத்தில் யார் முதல்வர்..? சி-வோட்டரில் அதிர்ச்சி..!