தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில நிர்வாகிகள், மாவட்ட வாரியாக செயலாளர், பொருளாளர், இணைச் செயலாளர், 2 துணைச் செயலாளர்கள் என 5 பேரும், பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேரும் என 15 பேர் பங்கேற்கின்றனர். மேலும், மாவட்டம் தோறும் ஒரு பெண் பிரதிநிதியும் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொள்கிறார். அந்த வகையில், மொத்தம் 2,500 பேர் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் கியூ.ஆர். கோடுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

திமுக, அதிமுக போன்ற முன்னணி கட்சிகளுக்கு போட்டியாக பிரம்மாண்டமாக பொதுக்குழுவிற்கு தவெக ஏற்பாடு செய்துள்ளது. வாழை, தோரணங்கள், கட்சிக் கொடிகள், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் என்று ஆடம்பரம் காட்டும். அதுபோன்ற வரவேற்பு விஜய்க்கும் அளிக்கப்பட இருக்கிறது. 10 குதிரைகளில் வீரர்கள் தவெக கொடியுடன் அணிவகுத்துநின்று வரவேற்கின்றனர். மண்டபத்தில் நுழைவு வாயில் கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வாயிலின் இருபுறமும் 2 செயற்கை யானைகள் தத்ரூபமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: தவெக முதல் பொதுக்குழுவுக்கு தயாராகும் கமகம விருந்து.. என்ன ஸ்பெஷல்?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுவில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
- வஃக்பு சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம்.
- இருமொழி கொள்கையில் உறுதி.
- பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது.
- சமூக நீதியை நிலைநிறுத்த, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
- டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
- மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்.
- நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை. பன்னாட்டு அரங்கிற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக.
- கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்.
- மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்.
- சட்டம் ஒழுங்கு சீர்கேட்டுக்குக் காரணமான தி.மு.க. அரசுக்குக் கண்டனம்.
- பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை.
- இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
- தேர்தல் கூட்டணி நிலைப்பாடு - தலைவர் விஜய்க்கே முழு அதிகாரம்.
- புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும், கட்சிகாக உழைத்து மரணமடைந்த திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி உள்ளிட்ட தொண்டர்களுக்கு இரங்கல் ஆகிய 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தவெக பொதுக்குழு மாநில நிர்வாகிகளுடன் சேர்த்து 1710 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் தான் விஜய் கட்சியின் முதல்வர் வேட்பாளர் ..! அதிர வைக்கும் தவெக நிர்வாகிகள்..!