முதலமைச்சர் தலைமையிலான திஷா கமிட்டி கூட்டத்தில் கலந்து கொள்வது வாடிக்கை தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.கே. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொப்பரை தேங்காய்க்கு விலை குறைவாக உள்ளதாகவும், அதற்கு மானியம் கொடுக்க வேண்டும் என கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் கேட்டிருந்தேன்.அதற்கு இந்த முறை முதலமைச்சர் ஒப்புதல் அளித்து உள்ளார்.

கொப்பரை தேங்காய்க்கு விலை குறைவாக இருப்பதால், விவசாயிகளிடம் அரசு கொள்முதல் செய்து மானியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன். விவசாயிகள் தேங்காய் பருப்பை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொடுத்தால் தனியாரை விட கூடுதல் விலை வழங்க கோரிக்கை விடுத்தோம். அதுக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார் என்றார்.
இதையும் படிங்க: மு.க.ஸ்டாலினைச் சந்தித்த ஏ.கே.செங்கோட்டையன்... முதல்வர் கொடுத்த ரியாக்ஷன்...!

நேற்று முன் தினம் நடந்த கூட்டத்தில் கோபியில் புறவழிச் சாலை, காட்டு பன்றிகள் தொல்லை இருப்பதால், அவற்றை சுட்டுக் கொள்ள அனுமதி கேட்டும்,அதே போன்று ஆதி திராவிடர் மக்கள் தொகுப்பு வீடுகள், பசுமை வீடுகள் கட்டுவதற்கு கூடுதலாக நிதி வேண்டும் என்று கேட்ட போது, வழங்குவதாக கூறியுள்ளார்.

திஷா கூட்டத்தில் தொடர்ந்து நான் கலந்து கொண்டு தான் இருக்கிறேன். தவிர தற்போது உள்ள சூழ்நிலைக்காக இப்படி சொல்கின்றனர். எப்பொழுதும் எனக்கு கொடுத்த பொறுப்பை சரியான முறையில் மக்களுக்கு பயன்படுத்த வேண்டும் மக்களுக்காக என்பது என் கருத்து எனக்கூறினார்.
இதையும் படிங்க: ஆடிக் கார் சந்திப்பு... ஆடிப்போன எடப்பாடி..! 2 மணி நேர சந்திப்பின் பின்னணியில் எஸ்.பி.வேலுமணி..?