அண்மைகாலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சட்டங்களும் தண்டனைகளும் எவ்வளவு கடினமாக்கப்பட்டாலும் குற்றங்கள் தொடர்ந்துகொண்டு தான் உள்ளது. சமீபத்தில் விருதுநகர், சென்னை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறின. அந்த வரிசையில் தற்போது தஞ்சையில் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

குடும்ப சூழல் காரணமாக பணம் கேட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை பர்வீன் தியேட்டர் பகுதியில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. இவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். ஓய்வு பெற்ற பிறகு இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் பெண்களுக்கு மட்டுமே வட்டிக்கு பணம் கொடுப்பதாக அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஆரோக்கிய சாமியிடம் தொலைபேசி வாயிலாக வட்டிக்கு பணம் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் நைட்ல இப்படியா நடக்கும்… புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!
அதற்கு ஆரோக்கியசாமி, அந்த பெண்ணிடம் வாங்கும் பணத்தை திருப்பி தர வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தன்னுடன் தனிமையில் இருந்தால் போதும் என்றும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தனக்கு பணம் வேண்டாம் எனக் கூறி போனை கட் செய்துள்ளார். அந்த பெண்ணை மீண்டும் தொடர்புகொண்ட ஆரோக்கியசாமி, வீட்டுக்கு வந்து பணத்தை தருகிறேன். இது குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் சுதாரித்து கொண்ட அந்த பெண், வீட்டிலேயே தொலைபேசியை மறைவான இடத்தில் வைத்து வீடியோவை ஆன் செய்து இருக்கிறார்.

அப்போது வீட்டுக்கு வந்த ஆரோக்கியசாமி அமர்ந்தபடி பேசி உள்ளார். திடீரென எழுந்து அந்த பெண்ணை கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அவரை தள்ளிவிட்டு விட்டு அவரை திட்டி வெளியே அனுப்பி இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு ஆரோக்கியசாமி பாலியல் தொல்லை கொடுத்த வீடியோவை அந்த பெண் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் ஆரோக்கியசாமிக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: உ.பி யில் அதிர்ச்சி!! 35 வயது பத்திரிகையாளர் சுட்டுக்கொலை!! போலீசார் விசாரணை