ஊரக வளர்ச்சித் துறை தொடர்பான முதலமைச்சரின் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றது தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் ழுவின் உறுப்பினர்கள் டிஆர் பாலு மாணிக்கம் தாக்கூர் திருமாவளவன் துரை வைக்கோ உள்ளிட்டோரும் பங்கேற்றிருக்கிறார்கள் தற்பொழுது முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்கு வருகை தந்திருக்கிறார் கூடுதல் விவரங்களுடன் செய்தியாளர் கண்ணன் இணைப்பில் இருக்கிறார் கண்ணன் முதலமைச்சர் தலைமையில் நடைபெறக்கூடிய இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பான விவரங்கள் நிச்சயமாக ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படுவது வரும் பல்வேறு திட்டங்களை கண்காணிக்க மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுவானது செயல்பட்டு வருகிறது.

இந்த குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறையின் அரசு செயலாளர்கள் உள்ளிட்டோர்கள் உறுப்பினராக இருப்பார்கள். இந்த குழுவானது ஒரு விரிவான சீரான இடைவெளியில் கூடி திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும். அதில் உள்ள இடர்பாடுகள் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது அதை சிறப்பாக செயல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஆடிக் கார் சந்திப்பு... ஆடிப்போன எடப்பாடி..! 2 மணி நேர சந்திப்பின் பின்னணியில் எஸ்.பி.வேலுமணி..?
அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் அந்த மாநில அளவிலான கூட்டமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களான சுப்புராயன், திருமாவளவன், சு.வெங்கடேசன், டிஆர் பாலு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர்களை பொறுத்தவரையில் தம்பித்துரை, அன்புமணி, ஜி.கே.வாசன் ஆகிய மூன்று பேரும் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

சட்டமன்ற உறுப்பினர்களை பொறுத்தவரை விஜி ராஜேந்திரன் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக அதிமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டை பங்கேற்று, இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்க உள்ளார். இந்த கூட்டத்திற்கு வருகை தந்த செங்கோட்டையனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக மலர்ச்சியோடு “வாங்க வந்து உட்காருங்க...” என அன்புடன் அழைத்து அமரவைத்துள்ளார். இதற்கு முன்னதாக நெல்லையில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் கூட பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனிடம் முதலமைச்சர் அன்பு பாராட்டியது சோசியல் மீடியாக்களில் வைரலானது.

இந்த கூட்டத்தை பொறுத்தவரையில் மிகவும் முக்கியமாக ஒருங்கிணைந்த வேளாண் திட்டம், ஊரகப் பகுதிகளில் வீடு கட்டும் திட்டம் மற்றும் மாற்றாளிகளுக்கு அடையாளத்தை வழங்குவது உள்ளிட்ட மூன்று முக்கிய கருட்பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இதைத் தவிர்த்து, ஒன்றிய அரசின் நிதி உதவி மற்றும் மாநில அரசின் நிதி உதவி இந்த இரண்டு நிதி உதவியும் சேர்த்து ஊரக வளர்ச்சி துறையில் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களுக்கு எவ்வளவு நிதி செலவு செய்யப்பட்டுள்ளது?, இன்னும் எவ்வளவு நிதி செலவு செய்ய வேண்டும்? அதில் உள்ள பிரச்சனைகள் என்ன? என்பது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது
இதையும் படிங்க: எடப்பாடி குறித்து கிடுக்கிடுப்பிடி கேள்வி... செய்தியாளரிடம் மழுப்பிய செங்கோட்டையன்...!