இந்த நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜரிவால், முதல்வர் அதிஷி, முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பல மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
பிர் லேயேங்கே கெஜ்ரிவால்.... அதாவது மீண்டும் கெஜ்ரிவால்" என்ற இப்பாடல் டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவாலை கொண்டு வருவோம் என்ற வரிகளுடன் தொடங்குகிறது. இந்தப் பாடலில் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளான சமீபத்தில் தொடங்கப்பட்ட நலத்திட்டங்கள், பெண்களுக்கு மாதம் ரூ. 2,100 வழங்கும் 'முக்யமந்திரி மகிளா சம்மன் யோஜனா' மற்றும் அனைத்து மருத்துவமனைகளிலும் மூத்த குடிமக்களுக்கு இலவச சிகிச்சையை உறுத செய்யும் சஞ்சீவனி யோஜனா போன்ற திட்டங்கள் பாட்டின் வரிகளாக இணைக்கப்பட்டுள்ளன

பாடலை வெளியிட்ட கெஜ்ரிவால் பேரவைத் தேரதல் டெல்லிமக்களுக்கு ஒரு பண்டிகையாகும் என்றார். "ஆம் ஆத்மியின் பிரசாரப் பாடல்களுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு ..வேட்பளார் தேர்வு தீவிரம் ..!
2015-லும், பின்னர் 2020-ல், தற்போது 2025-லும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பிறந்தநாள், திருமணங்கள் மற்றும் பிற கொண்டாட்டங்களிலும் இந்தப் பாடலை ஒளிபரப்புங்கள், விளம்பரப் படுத்துங்கள்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நிகழும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் அறிவித்தது. பிப்ரவரி எட்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி தேர்தலில்ன போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து முடித்தது. பாஜக முதல் பட்டியலவெளியிட்டுள்ளது .
மொத்தமுள்ள 72 இடங்களில் பாஜக 29 இடங்களுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்து இருந்தாலும் காங்கிரஸ் 48 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்து இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாக போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தற்போது பிரிந்து பாஜகவுக்கு எதிராக தனித்து போட்டியிட முடிவு செய்தன. இதனால் மும்முனை போட்டி உருவாகி இருக்கிறது.
கெஜ்ரிவாலை வீழ்த்த
முக்கிய வேட்பாளர்கள்

டெல்லி தேர்தலில் இரு முறை வெற்றி பெற்று தற்போது ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகி வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலை வீழ்த்துவதற்கு பலம் வாய்ந்த வேட்பாளர்களை காங்கிரசும் பாஜகவும் நிறுத்தி உள்ளது. அவர்கள் இருவரும் டெல்லி முன்னாள் முதல்வர்களின் மகன்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் காங்கிரஸ் சார்பிலும், சாஹிப் சிங் வர்மாவின் வீரியம் மிக்க மகனான பர்வேஷ் பாஜக சார்பிலும் களம் இறக்கப்பட்டுள்ளனர். தேர்தலை ஒரு பண்டிகை போல் கொண்டாடும்படி கெஜ்ரிவால் அழைப்பு விடுத்திருந்தபடி தலைநகர் டெல்லி விழாக்கோலம் பூண்டு வருகிறது.
இதையும் படிங்க: டெல்லி சட்டசபை தேர்தல் சுவாரஸ்யம்: 'ஜானவாச குதிரை' புகைப்படத்தை போட்டு, "மாப்பிள்ளை யார்?" என, ஆம் ஆத்மி கிண்டல்; பாஜக பதிலடி