அண்ணாமலையை பொருத்தவரை அவர் அதிமுக கூட்டணியை ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ, அண்ணாமலை பாஜக தமிழக தலைவராக இருப்பது பிடிக்கவில்லை. இருவருக்கும் நிலவி வரும் பனிப்போர் தொடர்ந்து வருகிறது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கூட்டணியை அண்ணாமலை விரும்பவில்லை. அதேபோல் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை கூட்டணி அமைக்க வேண்டாம் என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இருப்பினும் பாஜக எடுக்கக்கூடிய முடிவுக்கு அண்ணாமலை கட்டுப்படுவார் என்றும் கூறப்பட்டது.

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவிடம், எங்களது முக்கிய நிபந்தனைகளில் ஒன்று அண்ணாமலையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். அவருக்கு அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் விருப்பமில்லை. அவர் இந்தக் கூட்டணி அமையக்கூடாது என்பதற்காகவே அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்களை அருகில் வைத்துக் கொண்டு அதிமுகவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார். அவரை வைத்தெல்லாம் முடியாதுங்க'' என வெளிப்படையாகவே கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பிடி கொடுக்காமல் அனுப்பி வைத்தார் அமித் ஷா.
இதையும் படிங்க: திமுக நிறுவனத்திற்கு திறப்பு விழா நடத்தியதே விஜய்தான்- டாராகப் பொளந்த அண்ணாமலை

பாஜக-அதிமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், 'அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால் நான் தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன்'' என ஏற்கெனவே அண்ணாமலை கூறி இருந்தார். எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து வந்த பிறகு டெல்லிக்கு அழைக்கப்பட்டார் அண்ணாமலை.
இந்நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார் அண்ணாமலை. அப்போது, எடப்பாடி பழனிச்சாமி, அமித்சாவை சென்று சந்தித்து வந்த பிறகு முன்னாடி இருந்த உங்களது அதிமுகவுடனான மோதல் போக்கு எப்படி இருக்கும்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, ''மோதல் போக்கு இல்லை. நான் எதற்கு செருப்பு இல்லாம் ரோட்டில் உங்களிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும்? என் கட்சியை வளர்க்க வேண்டும் என்று நான் இருக்கிறேன். என் தொண்டன் செத்துப் போய் 50 வருடமாக 60 வருடமாக பாஜக வளரும் என்று வளருமா வளராதா என்று என் தொண்டன் நின்று கொண்டிருக்கிறான்.

அதற்கு பொறுப்பு ஏற்பது நான்தான். என்னுடைய செயல்பாடுகள் எல்லாமே எனது கட்சி வலிமைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இருக்கிறேன். அதே நேரத்தில் 2026 தேர்தலைப் பற்றி நான் ஒரு வார்த்தையை பயன்படுத்தினேன். தமிழக மக்களுடைய நலன், சில நேரத்தில் கட்சியை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை எந்த பொறுப்பிலும் வேலை செய்வதற்கு நான் தயார். தொண்டனாக வேலை செய்வதற்கும் தயார். என்னால் யாருக்கும் எப்போதும் பிரச்சினை வராது. கட்சி தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? ஏற்றுக் கொள்ள மாட்டாரா? என்கிற பிரச்சினையே இல்லை.

என்னுடைய வேலை என்னவோ அதை நான் தொண்டனாகக்கூட செய்வேன். தலைவர் என்கிற பதவி இருந்தால் தான் வேலை செய்வேன் என்கிற அவசியம் கிடையாது. ஆகையால் எந்த கருத்துக்களாக இருந்தாலும், நாங்கள் எங்களுடைய தலைவரிடம் சொல்லி இருக்கிறோம். தமிழக மக்களின் நலன் முக்கியமானது, முதன்மையானது. அதற்காக அண்ணாமலையை பொருத்தவரை எதை வேண்டுமானாலும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
கூட்டணி பற்றிப்பேச பேச இன்னும் நிறைய காலம் உள்ளது. பாஜக யாருடன் கூட்டணி என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை.2026 தேர்தலை பொருத்தவரை திமுகவே பாஜகவின் எதிரி. அதை ஆட்சியில் இருந்து அகற்றுவதே நோக்கம்" எனத் தெரிவித்தார்.

அண்ணாமலையின் பேச்சு அவர் பதவியில் நீடிப்பது சந்தேகமே என்பதை உணர்த்துவதாகவே இருக்கிறது. அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அவருக்கு தேசிய அளவில் முக்கியப்பொறுப்பு வழங்கவும் பாஜக தலைமை முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'திடீர்னு ஒரு ஆடு வந்து... அண்ணாமலையை செட் செய்த திமுக...? ஆதவ் சொன்ன அதிர்ச்சி- புருவம் உயர்த்திய விஜய்..!