டெல்லியில் சட்டம்- ஒழுங்கு நிலைமையை மேம்படுத்த முதல்வர் ரேகா குப்தா- உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.10 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பணிகள் தொடங்குகின்றன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நார்த் பிளாக்கில், டெல்லி அரசு, டெல்லி காவல்துறையின் உள்துறைத் துறையின் மூத்த அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
காவல்துறைக்கும், அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, எதிர்காலத் திட்டங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டன. டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோராவுடன், சில சிறப்பு ஆணையர்கள், முதல்வர் ரேகா குப்தா, டெல்லி உள்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட், உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் மற்றும் தலைமைச் செயலாளர் தர்மேந்திரர் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தொகுதி மறுவரையறையைப் பண்ணவே கூடாது.. தமிழக முதல்வர் எதிர்ப்பை தொடர்ந்து கர்நாடக முதல்வர் தடாலடி..!

10 ஆண்டுகள் கழித்து டெல்லியின் உள்துறை அமைச்சர், காவல்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுபோன்ற கூட்டத்தில் கலந்து கொண்டது இதுவே முதல் முறை.
இந்தக் கூட்டத்தில் காவல்துறைக்கும், அரசிற்கும் இடையிலான பல்வேறு நிலைகளில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதுடன், வழக்குப் பதிவது, சிறைச்சாலைகள் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டன.
டெல்லியில் கடந்த சில மாதங்களில் காவல்துறை நிகழ்த்திய சாதனைகளை விவரிக்கும் வகையில் காவல்தை ஆணையர் சஞ்சய் அரோரா ஒரு சிறப்பு வீடியோ தொகுப்பை ஒளிபரப்பிக் காட்டினார். சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிரான நடவடிக்கையின் நிலை குறித்தும் காவல் ஆணையர் சஞ்சய் அரோரா விளக்கினார்.

தேர்தலுக்கு முன்பு, டெல்லியில் சட்டவிரோதமாக வசிக்கும் வங்கதேச ஊடுருவல்காரர்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் டெல்லி காவல்துறை 15 மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக வசிப்பவர்களைக் கண்டறிந்து கைது செய்ய ஒரு விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியதையும் சுட்டிக் காட்டினர்
இதுவரை 22,000 சந்தேகத்திற்கிடமான வங்கதேச நாட்டினரை காவல்துறை அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 750 சந்தேக நபர்கள் குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் இருந்து தகவல் கோரப்பட்டதாகவும் எடுத்துக் கூறினர்.
ரோஹிங்கியா குடியேறிகளையும் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சீனியர் உளவுப்பிரிவு போலீசார், மார்கெட் பகுதிகளில் உள்ள பிரதிநிதிகளைச் சந்தித்து சட்ட விரோதக் குடியேறிகள் பற்றிய தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

நவம்பர் 22 அன்று, தேர்தலுக்கு முன்பு, அமித் ஷா சட்டம் ஒழுங்கு நிலைமையை மறுபரிசீலனை செய்ய காவல் துறை அதிகாரிகளை வரவழைத்து, குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து முற்றிலும் குற்றங்களே நடைபெறாத வகையில் பணியாற்றுமாறு அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் உயர் காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் சட்டம்- ஒழுங்கு நிலைமையைப் பொறுத்தவரை எந்த மெத்தனமும் பொறுத்துக்கொள்ளப்படாது என்று கூறியிருந்தார். ஒவ்வொரு டெல்லிவாசியும் முற்றிலும் பாதுகாப்பாக உணர்வதை உறுதி செய்வது ஒவ்வொரு காவலரின் தனிப்பட்ட பொறுப்பாகும் என்று அவர் வலியுறுத்தினார். இது தொடர்பாக ஒரு சிறப்பு செயல் திட்டத்தை தயாரிக்குமாறு ஷா அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
தேசிய தலைநகரில் சட்டம் -ஒழுங்கு மற்றும் பொது பாதுகாப்பை உறுதி செய்வதில் எதிர்கொள்ளும் சமீபகால முன்னேற்றங்கள், பாதுகாப்பு சவால்கள் குறித்து விவாதிப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாக இருந்தது.
இதையும் படிங்க: ஊதிவிட்ட பாஜக... ஸ்டாலினுக்கு எதிராக அமித் ஷாவின் ட்ரிக்ஸ்: மாஸ்டர் ப்ளான்..!