சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "மார்ச் 5ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கட்டத்திற்கு அழைத்திற்கிறார்கள். பாஜக ஆலோசனை செய்த பிறகு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்துள்ளோம். இதற்கான காரணத்தை முதலமைச்சருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம்.

முதலமைச்சரின் கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளோம். 3 பக்கத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் முதலமைச்சர் எழுப்பி இருந்த கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு மட்டுமில்லாமல் மொழி பிரச்சினை , தேசிய கல்வி கொள்கை என முதலமைச்சர் பல கேள்விகளை எழுப்பி இருந்தார்.
இதையும் படிங்க: திமுகவின் நாடகத்தை பாஜக புறக்கணிக்கும்; அண்ணாமலை திட்டவட்டம்!!
இந்த எல்லா கேள்விக்கும் நாங்கள் பதிலளித்துள்ளோம். எங்கையும், எந்த ஒரு மாநிலத்துக்கும் யாரும் அநியாயம் செய்வதில்லை. குறிப்பாக தமிழகத்துக்கு பிரதமர் மோடி அநியாயம் செய்யமாட்டார். அப்படி இருக்கையில் எதற்காக அனைத்து கட்சி கூட்டம் என கேள்வி எழுப்பி கடிதம் எழுதியுள்ளோம்" என்றார்.

தொடர்ந்து நடிகை புகாரில் சீமான் வீட்டில் போலீசாருடன் நடந்த கைகலப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, " சீமான் வீட்டில் போலீசார் நடந்து கொண்ட விதம் சரியில்லை. ஆஜராகவில்லை என்றால் நடவடிக்கை எடுத்து இருக்கலாம். போலிஸ் தங்களின் அதிகாரத்தை தவறாக பயப்படுத்துவதாக அச்சம் எழுகிறது" என்றார்.
இதையும் படிங்க: தினம், தினம் ஷுட்டிங் நடத்துகிறீர்கள்... முதலமைச்சர் மீது பாயும் அண்ணாமலை...!