''தமிழக பட்ஜெட் லோகோவில் உள்ள ரூபாய் சின்னத்தை 'ரூ' என்ற தமிழ் எழுத்தால் அரசு மாற்றியது மிகப்பெரிய முட்டாள்தனம்'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் லோகோவில் உள்ள ரூபாய் சின்னத்தை 'ரூ' என்ற தமிழ் எழுத்தால் அரசு மாற்றியுள்ளது. 2025-26 பட்ஜெட்டில், ‘₹’ சின்னம் ‘ரூ’ சின்னமாக மாற்றப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை மூலம் 'இந்தி திணிப்பு' தொடர்பாக திமுக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையில், மு.க.ஸ்டாலின் அரசு இந்த முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது. தேசிய நாணய சின்னத்தை ஒரு மாநிலம் நிராகரிப்பது இதுவே முதல் முறை.
இதையும் படிங்க: வாழத்தகாத மாநிலமாக மாறும் தமிழ்நாடு.. கனவுலகத்தில் வாழ்ந்து வரும் முதலமைச்சர்.. குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் அண்ணாமலை..!
ரூபாய் சின்னமான ₹ அதிகாரப்பூர்வமாக ஜூலை 15, 2010 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது மார்ச் 5, 2009 அன்று அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு வடிவமைப்புப் போட்டியைத் நடத்தி இந்த லோகோ அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2010 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் போது, அப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்திய நெறிமுறைகள், கலாச்சாரத்தை பிரதிபலிப்பதை உள்ளடக்கிய ஒரு சின்னத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு பொதுப் போட்டி நடத்தப்பட்டு, அந்த லோகோ தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தி திணிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், தமிழக பட்ஜெட்டில் இருந்து ₹ சின்னத்தை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய அம்சங்களை, குறிப்பாக மும்மொழி சூத்திரத்தை செயல்படுத்த தமிழ்நாடு மறுத்துவிட்டது. புதிய கல்விக் கொள்கை மூலம், தமிழ் பேசும் மக்களை இந்தி கற்க கட்டாயப்படுத்த மத்திய அரசு விரும்புவதாக திமுக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், தமிழக அரசு ரூபாய் (₹) சின்னத்தை 'ரூ' எனத் தெரிவித்து இருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். "தமிழர் உருவாக்கிய ரூபாய் (₹) சின்னத்தை மாற்றுகிறார்கள். தமிழர் ஒருவர் உருவாக்கி, இந்தியா முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரூபாய் சின்னத்தை (₹), தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் மாற்றுகிறது.

ரூபாய்க்கான ₹ சின்னத்தை வடிவமைத்த உதயகுமார்
தமிழ்நாடு அரசு மாற்றியுள்ள ரூபாய் குறியீடு திமுக முன்னாள் எம்.எல்.ஏ-வின் மகன் உதயகுமார் உருவாக்கியது இந்த சின்னத்தை வடிவமைத்த உதயகுமார், முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வின் மகன். மு.க.ஸ்டாலின் அவர்களே...இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லண்டனில் அண்ணாமலை எந்த மொழியில் பேசினார்? - வறுத்தெடுத்த அமைச்சர்கள்!!