ஆந்திர மாநிலம் சித்தூர் காந்தி சாலையில் ஐடிபிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு அருகில் லட்சுமி சினிமா ஹால் அருகே அமைந்துள்ள பகுதியில் புஷ்பா கிட்ஸ் வேர்ல்ட் ஷாப்பிங் மால் உரிமையாளரின் வீடு அமைந்துள்ளது. இவர் சிறுவர்கள், சிறுமியருக்கான ஆடைகள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை இவரது வீட்டிற்கு பின் PRESS என ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வேன் ஒன்று வந்து நின்றுள்ளது. வேனில் இருந்து இறங்கிய 10 பேர் கொண்ட கும்பல், அவரது வீட்டிற்குள் படபடவென எகிறி குதித்து உள் நுழைந்துள்ளான்ர். ஏதோ சப்தம் கேட்பதாக வீட்டின் உரிமையாளர் எழுந்து வந்த நிலையில், 10 பேர் கொண்ட கும்பல் தனது வீட்டிற்குள் நுழைவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

யார் நீங்கள் எல்லாம்? எதற்கு என் வீட்டிற்குள் நுழைகிறீர்கள் என அவர் சப்தம் போட்டுள்ளார். உடனே கொள்ளையர்களின் 2 பேர் அருகில் இருந்த இரும்பு ராடால் அவரது தலையில் ஓங்கி அடித்துள்ளனர். இதில் ரத்த காயம் அடைந்தவர் வலியில் கத்தி உள்ளார். பின்னர் அந்த 10 பேரிடமும் இருந்து தப்பித்து வீட்டை விட்டு வெளியேறினார். அவரின் கூக்குரல் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தில் உள்ள மக்கள் கொள்ளையர்களை வீட்டின் உள்ளேயே வைத்து கதவை பூட்டினர். தங்களது வீடுகளையும் வெளிபுறத்தில் பூட்டி, கொள்ளையர்கள் உள்ளே நுழைய முடியாதபடி செய்தனர். அதன் பின்னர் கொள்ளையர்கள் குறித்து போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையும் படிங்க: “ஒரு கோடிப்பே..." 50 வயசில் மாமியாருக்கு அடித்த ஜாக்பாட்... ஆந்திராவையே மிரள வைத்த மருமகள்...!

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டைசுற்றி வளைத்தனர். கொள்ளையர்களை வெளியே வரும் படி அழைத்துள்ளனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதத்தில் கொள்ளையர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். 2 ரவுண்டு துப்பாக்கி சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீசார் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க 2 பேர் மாடியில் இருந்து குதித்த நிலையில், அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து வீட்டை சுற்றி வளைத்த போலீசார், மாடி வழியாக அடுதடுத்த வீடுகளுக்கு எகிறி குதித்து தப்ப முயன்ற கொள்ளையர்கள் 3 பேரை கைது செய்தனர். இதுவரை 5 பேரை கைது செய்துள்ள போலிசார் வீட்டிலேயே மறைந்துள்ள மேலும் 5 பேரை தேடி வருகின்றனர். சாதாரண கிப்ட் கடை வைத்துள்ள ஒருவரின் விட்டிற்கு எதற்கு 10 பேர் துப்பாக்கியுடன் திருட வரவேண்டும். இவர்களின் நோக்கம் விட்டில் கொள்ளை அடிப்பதா? அல்லது வீட்டின் பக்கத்தில் உள்ள பேங்கில் கொள்ளை அடிப்பதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொள்ளையர்கள் பிரஸ் என்ற ஊடகத்தின் ஸ்டிக்கரை பயன்படுத்தி ஒரு காரில் வந்தது போலீசார் கண்டறிந்த நிலையில் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 3வது குழந்தை பெற்றால் ரூ.50 ஆயிரம், பசுவும் கன்றும்... ஆந்திர எம்.பி அதிரடி அறிவிப்பு..!