ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்பச் சென்ற ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு, ரூ.93 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கி சூட்டில் ஊழியர் ஒருவர் அந்த இடத்திலேயே பலியானார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கர்நாடகாவின் பீதர் மாவட்டம், சிவாஜி சவுக் பகுதியில் மாவட்ட நீதிமன்றம் அருகேஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம் உள்ளது. அங்கு நேற்று காலை 10.30 மணிக்கு பணத்தை நிரப்புவதற்காக சி.எம்.எஸ். ஏஜென்சியை சேர்ந்த 2 ஊழியர்கள் வந்தனர்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 பேர் அவர்களை வழிமறித்து பணத்தை கொள்ளை அடிக்க முயன்றனர். ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கொள்ளையர்கள் அவர்களின் கண்களில் மிளகாய் பொடியை தூவினர்.
இதையும் படிங்க: எலான் மஸ்க் அழைக்கிறார்! பள்ளியும், படிப்பும் முக்கியமல்லையாம்! இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு...

இதனால் ஊழியர்கள் கண் எரிச்சலில் நிலைதடுமாறி விழுந்த நிலையில் அவர்கள் மீது கொள்ளையர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த ஊழியர்கள், கிரி வெங்கடேஷ்(42) சிவகுமார்(35) என தெரியவந்தது. உடனடியாக அவர்கள்அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலே கிரி வெங்கடேஷ் உயிரிழந்தார். சிவகுமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.
வாகனத்தை ஓட்டிய ராஜசேகர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பணம் நிரப்ப வரும் வாகனத்துடன் வழக்கமாக துப்பாக்கி எழுதிய காவலர்கள் பாதுகாப்புக்கு வருவார்கள். ஆனால் நேற்று காவலர் யாரும் உடன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிக் குண்டு பாய்ந்து ஊழியர்கள் நிலை குலைந்து கீழே விழுந்ததும் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கி பணம் இருந்த ட்ரங்க் பெட்டியை தூக்க முயன்றனர். ஆனால் அவர்களால் அந்த பெட்டியை தூக்கி மோட்டார் சைக்கிளில் ஏற்ற முடியவில்லை. ஆனால் ஆனால் வெற்றி கைதவறி கீழே விழுந்து திறந்து கொண்டது
உடனே கொள்ளையர்கள் பெட்டியில் இருந்த கத்தை கத்தையான பணத்தை அள்ளி தங்கள் இருசக்கர வாகனங்களில் போட்டுக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பத்து நிமிடங்களில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறிவிட்டது.

இதில் வேதனை தரும் விஷயம் என்னவென்றால், கொள்ளை நடந்த இடம் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால் சிறிது நேரத்தில் அங்கு நூற்றுக்கணக்கான பேர் கூடி விட்டார்கள். ஆனால் அவர்களின் ஒருவர் கூட துணிச்சலுடன் கொள்ளையர்களை பிடிக்க முன் வரவில்லை. ஆனால் சிலர் அந்த காட்சிகளை விறுவிறுப்பாக தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்ததை பார்க்க முடிந்தது.
சிறிது நேரத்தில் இந்த பட்டப்பகல் கொள்ளை குறித்து மாநிலம் முழுவதும் வீடியோக்கள் வைரலாக பரவின. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்கள் 8 ரவுண்டு வரை துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

பீதர் போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் குண்டே கொள்ளை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். கொள்ளையர்களைப் பிடிக்க 5 சிறப்பு படை அமைக்கப்பட்டு இருப்பதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரகாந்த் பூஜாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அந்தப் பகுதியிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் தெலுங்கானா மாநில எல்லை வருகிறது. எனவே கொள்ளையர்கள் பக்கத்து மாநிலத்திற்கு தப்பி சென்று இருக்கலாம் என்று கருதி அங்கும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஏடிஎம் மையத்தில் இருந்து சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீஸார் கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில் கொள்ளையர்கள் ரூ.93 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பட்டப் பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசு ஊழியர்கள் இனி ‘ஜாலி’தான்! உற்சாக அறிவிப்பு வெளியிட்ட மோடி அரசு...