ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வியாழக்கிழமை அன்று, ரஷ்யாவுக்ரைன் போரை தவிர்க்க உலகத் தலைவர்கள், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட பல தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
அதே நேரத்தில், கடுமையான நிபந்தனைகளுடன், போர் நிறுத்தம் செய்யப்படும் எனவும் புதின் தெரிவித்துள்ளார்.
பெலாரஸ் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாஷென்கோவைச் சந்தித்த பின்னர் கிரெம்ளினில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய புதின், “உக்ரைன் மோதலை ஒழுங்குபடுத்துவதற்கு அமெரிக்க அதிபர் மிகுந்த கவனம் செலுத்தியதற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.சீன அதிபர், இந்திய பிரதமர் மற்றும் பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவின் தலைவர்கள் இந்த விவகாரத்தில் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: #BREAKING: முடிவுக்கு வரும் உக்ரைன் ரத்தக்களரி.. மாஸ்கோவுக்கு தூதுவர்களை அனுப்பும் ட்ரம்ப்..
மார்ச் 11 அன்று சவுதி அரேபியாவில் உக்ரைன் ஏற்றுக்கொண்ட 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் முன்னெடுத்ததை புதின் ஒப்புக்கொண்டார். மாஸ்கோவுக்கு வந்த அவர், “இரண்டாவதாக, போர் நிறுத்த முன்மொழிவுகளை நாங்கள் ஏற்கிறோம்” என்று கூறினார்.
ஆனால், எங்கள் நிலைப்பாடு, போர் நிறுத்தம் நீண்ட கால அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் உள்ளது. இது நெருக்கடியின் ஆரம்ப காரணங்களை நீக்க வேண்டும்.” உக்ரைனின் நடுநிலைமை மற்றும் பிரதேச சலுகைகள் என்ற ரஷ்யாவின் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார், இது ஏற்கனவே ஜனவரி 2025 ஆண்டு எடுத்த உறுதிமொழியோடு ஒத்துப்போகிறது.
உக்ரைனின் நோக்கங்கள் குறித்து பேசும்போது உக்ரைனின் போர் நிறுத்தத்திற்கான முடிவு குறித்து சிறிது சந்தேகம் எழுப்பினார் புதின், "சவுதி அரேபியாவில் அமெரிக்கர்களுக்கும் உக்ரைனியர்களுக்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது, அது உக்ரைனுக்கு அமெரிக்க கொடுத்த அழுத்தத்தின் கீழ் எடுக்கப்பட்ட முடிவு போல் தெரிகிறது. உண்மையில், உக்ரைன் அமெரிக்கர்களிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும் என்று நான் முழுமையாக நம்புகிறேன், அது நிலைமையை அடிப்படையாகக் கொண்டது” என்று கூறினார்.
உக்ரைனின் குர்ஸ்க் பிரதேசத்தை மீண்டும் ரஷ்யா கைப்பற்றிய நிலையில், கீவின் போர்க்களத்தில் ஏற்பட்ட இழப்புகள் பேச்சுவார்த்தைகளுக்கு காரணமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: சவுதியில் அமைதிப் பேச்சு-... 70 ட்ரோன்களை ஏவி ரஷ்யாவில் பேரழிவு: ஜெலென்ஸ்கி வெறியாட்டம்..!