மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றியது. மத்திய அரசின் புதிய வக்பு சட்டமானது, இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தில் தலையிடுவதாகவும் இஸ்லாமியர்களின் வக்பு வாரிய சொத்துகளை அரசு கையகப்படுத்த முயற்சிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் எதிர்த்தன.
மேலும் இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கின் விசாரணையில் சரமாரியான கேள்விகளை முன்வைத்த நீதிபதிகள், மத்திய அரசின் பதில் திருப்திகரமாக இல்லை என கூறியதுடன் நோட்டீஸ் வழங்கவும் உத்தரவிட்டனர். மேலும், வக்ஃப் வாரியங்கள் மற்றும் கவுன்சில்களில் முஸ்லிம் அல்லாதவர்களை நியமிப்பதற்கும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வக்ஃபு விவகாரம் தலைதூக்கி உள்ள நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டம் மத சுதந்திரத்தில் தலையிட்டால் ராஜினாமா செய்வேன் என பாஜக எம்.பி ஒருவர் கூறியுள்ளார். வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 குறித்து, பாஜக எம்.பி.யும் வக்ஃப் கூட்டுக்குழுத் தலைவருமான ஜக்தம்பிகா பால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எங்கள் அறிக்கை அரசியலமைப்பிற்கு விரோதமானதாக அல்லது மத சுதந்திரத்தில் தலையிடுவதாக இருந்தால், நான் ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவக் கல்வி தமிழில் இல்லை..! அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு மா.சு. பதிலடி..!
இதையும் படிங்க: இந்து கோயில்களின் புனிதத்தை இப்படி கெடுக்கனுமா? - நயினார் நாகேந்திரன் காட்டம்!