தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ரவிரியாலாவில் கடந்த 2ம் தேதி SBI ATM இயந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் கட் செய்து கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளையில் ஈடுப்பட்ட 10 பேரில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. கொள்ளையர்கள் யூடியூப் பார்த்து ஏடிஎம் மிசினை கட் செய்ய பழகியதும், பிளைட்டின் வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிந்தது.

ராஜஸ்தானை சேர்ந்த ராகுல் என்ற ராகுல் கான் (வயது 25) ஐதராபாத் பஹாடி ஷெரீப்பில் வசித்து வருகிறார். ஜேசிபி மெக்கானிக்காக பணிபுரிகிறார். இவர் கிராமப்புறங்களில் உள்ள ஏடிஎம்களை குறிவைத்து கண்காணித்து வந்துள்ளார். பதான்சேருவில் வசிக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த முஸ்தகீம் கான் (வயது 28) உடன் சேர்ந்து ரவிரியாலாவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டினர்.
இதற்காக அவர்களுடன் ராஜஸ்தானை சேர்ந்த ஷாருக் பஷீர் கான் (வயது 25), ரபீக் கான் (வயது 25) ஜாஹுல் பதான் கான், வாஹித் கான் (வயது 18), ஷகீல் கான், ஃபர்வேஸ், ஹரியானாவைச் சேர்ந்த சுத்பின் கான் (வயது 28), பீகாரைச் சேர்ந்த முகமது சர்பராஸ் (வயது 28) ஆகியோரை கொள்ளையடிக்க வரவழைக்க முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ‘எஸ்எஸ்ஏ நிதி’யை வழங்குங்கள்.. நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை..!

இதில் ஏற்கனவே டெல்லியில் இருந்த ஷாருக் பஷீர் கான், முஸ்தாக் கான், சுத்பின் கான் மற்றும் ரஃபீக் ஆகியோரை பிளைட் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து ஐதராபாத்திற்கு வரவழைத்தனர் மற்றவர்கள் ரயிலில் வந்தனர். பின்னர் இந்த மாதம் 2 ம் தேதி அனைவரும் சேர்ந்து நள்ளிரவுக்குப் பிறகு அதிகாலை 1.55 மணியளவில், அவர்கள் அனைவரும் கேஸ் கட்டர்களுடன் ஏடிஎம்மிற்குள் நுழைந்தனர். பின்னர் ஒருவர் அலாறம் ஒயரை துண்டிக்க மற்றொருவர் கேமரா மீது கருப்பு நிற பெயிண்ட் ஸ்ப்ரே அடித்தும் மற்ற இருவர் கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை கட் செய்தனர்.

பின்னர் அதில் இருந்த ₹29.69 லட்சம் கொள்ளையடித்தனர். மீதமுள்ளவர்கள் வெளியே கண்காணிப்பில் இருந்தனர். பின்னர் அவர்கள் வந்த காரில் கொள்ளையடித்த பணத்துடன் தப்பி சென்றனர். இதுகுறித்து வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீவாணி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ரச்சகொண்டா போலீஸ் கமிஷனர் சுதீர்பாபு ஐந்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். தனிப்படை போலீசார் விசாரனையில் திருட்டின் போது ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு கார் பயன்படுத்தப்பட்டதை அவர்கள் சிசிடிவி காட்சி மூலம் அடையாளம் கண்டனர்.

சிசிடிவி காட்சிகள் மூலம் அந்த காரின் நகர்வுகளைக் கண்காணித்தனர். இதில் ராகுல் கான், முஸ்தகீம் கான், ஷகீல் கான், வாஹித் கான் மற்றும் ஷாருக் பஷீர் கான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ராகுல் கான் இதற்கு முன்பு பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம் திருட்டுகளைச் செய்துள்ளது விசாரணையில் தெரிந்தது. இவர்கள் ஐதராபாத் மற்றும் ஒடிசாவில் கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம்களை கொள்ளையடித்ததும் தெரிந்தது. ராகுல் கான் மற்றும் ரபீக் கான் ஆகியோர் கேஸ் கட்டர் மூலம் பணத்தை கொள்ளையடிப்பதையும் ஏடிஎம் திறப்பது எப்படி என்றும் யூடியூப்பில் பார்த்து கற்றுக்கொண்டு திட்டத்தை செயல்ப்படுத்தி வந்தனர்.

இதேகும்பல் ரவிரியாலாவில் ஏடிஎம்மை கொள்ளையடித்த பிறகு செல்லும் வழியில் மைலார் தேவ் பள்ளியிலுள்ள ஒரு ஏடிஎம்மை கொள்ளையடிக்க முயன்றார். அங்கே தீ விபத்து ஏற்பட்டதால் அவர்களால் அதைத் திறக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் சாலை வழியாக காரில் ராஜஸ்தான் சென்றனர். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஹரியானாவின் மேவாட் பகுதியைச் சேர்ந்த கொள்ளை கும்பலாக ஒரே கிராமத்தைக் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் கிராமத்தில் இருந்து வெளியே வந்தால் பெரும் கொள்ளையடித்த பின்னரே வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவர்களிடம் துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் கோடரிகளைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பதும், தங்கள் கொள்ளைக்கு குறுக்கே வருபவர்களைக் கொல்லவும் கூட அவர்கள் தயங்குவதில்லை என்பதை போலீசார் கண்டறிந்தனர். இந்த நிலையில் இந்த மாதம் மார்ச் 24 ஆம் தேதி மீண்டும் நகரில் பல இடங்களில் ஏடிஎம்மில் கொள்ளையடிப்பதற்காக வந்தவர்களை 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ₹4 லட்ச பணம், கார், ஏ.டி.எம்.கொள்ளைக்கு பயன்படுத்தும் கேஸ் கட்டர் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். வங்கி கொள்ளையில் ஈடுப்பட்டவர்களை 23 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டதாக காவல் ஆணையர் சுதீர் பாபு தெரிவித்தார்.
இதையும் படிங்க: இது வாயா? இல்ல வடை சுடற இடமா? இந்தியவின் இரும்பு மனிதர்: வாழும் வல்லபாய் அமித்ஷா..! RBU புகழராம்..!