தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்ய அமித் ஷா சென்னை வந்திருக்கிறார். இந்நிலையில் சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். சென்னை ஐடிசி கிராண்ட் சோலா ஹோட்டலிருந்து சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை வீட்டிற்கு பலத்த பாதுகாப்புடன் அமித் ஷா காரில் புறப்பட்டுச் சென்று நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.

தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான குமரி ஆனந்தன், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் காலமானார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குமரி ஆனந்தனுடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவும் அவருடைய மகளான தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆறுதல் தெரிவிக்கவும் சாலிகிராமித்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார்..!

அதற்குப் பிறகு அங்கிருந்து சென்னை மயிலாப்பூரில் இருக்கக்கூடிய ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு அமித்ஷா செல்ல இருப்பதாக கூறப்பட்டது. தமிழிசை சௌந்தரராஜனின் இல்லம் அமைந்திருக்கக்கூடிய சாலிகிராமத்திலிருந்து மயிலாப்பூர் செல்லக்கூடிய அமைச்சர் அதன் தொடர்ச்சியாக ஐடிசி கிராண்ட் சோலா தனியார் நட்சத்திர விடுதிக்கு மீண்டும் திரும்புவார் என்றும், நண்பகல் 12 மணிக்கு மேல் ஐடிசி கிராண்ட் சோலா தனியார் நட்சத்திர விடுதியில் அமித் ஷா செய்தியாளர்களைச் சந்திப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது அந்த அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தற்பொழுது பாஜகவினர் தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதன்படி சரியாக 11:00 மணிக்கு மேலாக அந்த செய்தியாளர் சந்திப்பு இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த நேரம் மாற்றப்பட்டிருக்கின்றது. பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் அமித் ஷா. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் அமித்ஷாவுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். செய்தியாளர் சந்திப்புக்காக 7 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளதால், இடம்பெறப் போகும் தலைவர்கள் யார் யார் என கேள்வி எழுந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று மாலை 4.30 30 மணிக்கு தான் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: பிரித்தாளுவதற்காக உகாதி வாழ்த்து கூறுகிறார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது தமிழிசை காட்டம்.!!