தஞ்சாவூரை சேர்ந்த 19 வயதான இளம்பெண், சென்னை படூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். ஏகாட்டூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் மாணவிக்கு சில தவறான நண்பர்கள் தொடர்பால் குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி வார விடுமுறையை முன்னிட்டு மாணவி சொந்த ஊரான தஞ்சாவூர் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை போல மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். விடுதிக்கு வந்ததும் நேராக தனது தோழியின் ரூமிற்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு இரவு முழுவதும் தங்கி மது குடித்ததாகவும் கூறப்படுகிறது.

தோழியின் அறையில் தங்கி, இரவு முழுவதும் வோட்கா மது குடித்த நிலையில் மாணவிக்கு போதை தலைக்கேறி உள்ளது. மித மிஞ்சிய போதையால் தலைசுற்றியுள்ளது. இதனால் மாணவி தள்ளாடி உள்ளார். சிறிது நேரத்திலேயே மாணவிக்கு தலைசுற்றல் அதிகமாகி குடலை புரட்டிக்கொண்டு வாந்தி வந்துள்ளது. தோழியில் அறையிலேயே வாந்தி எடுத்துள்ளார். அதிகமாக குடித்ததால் மாணவி வாந்தி எடுப்பதாக அவரது தோழியும் நினைத்துள்ளார். இந்நிலையில் வாந்தி எடுத்தபடியே போதையில் மாணவி மயங்கி உள்ளார். மாணவியின் போதையை தெளிய வைக்க அவரது தோழி முயற்சித்தும் பயனில்லை. மாணவி மயங்கியபடியே மூர்ச்சையாகி உள்ளார்.
இதையும் படிங்க: ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை.. தொழில் போட்டி காரணமா..? போலீசார் விசாரணை..!

இதனால் பதறிப்போன அவரது தோழி, நண்பர் ஒருவருக்கு அழைத்துள்ளார். நண்பர் வந்ததும் அவரின் உதவியோடு, இருசக்கர வாகனத்தில் மாணவியை அருகே இருந்த கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனைய்க்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சென்றதும் மாணவி திடீரென மயங்கியதாக தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் விசாரித்ததும் உண்மையை கூறி உள்ளனர். இதனிடையே மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இற்ந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு முழு விபரம் தெரியவரும் என்றும் கூறினர்.

மதுபழக்கம் இளைய சமூதாயத்தினரிடையே பெருகி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் அத்துமிறல் போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரிக்க மது மற்றும் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்ததே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். 18 வயது நிரம்பியவர்களுக்கு மதுவகைகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற சட்டமும் உள்ளது. இந்நிலையில் 19 வயதே ஆன கல்லூரி மாணவி அதீத மது போதையால் மரணம் அடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முன் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஊட்டியில் காதலனுடன் சேர்ந்து அதிக அளவில் மது சாப்பிட்டது மட்டுமல்லாமல், போதை காளானையும் சாப்பிட்ட தனியார் நர்சிங் கல்லூரி மாணவி இறந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதற்கட்ட விசாரணையில் மாணவி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. கூடா நட்பால் ஏற்பட்ட போதை பழக்கத்தின் காரணமான மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சி மண்டலங்கள் 15லிருந்து 20 ஆக உயர்வு.. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு..!