கடந்த ஜனவரி மாதம் நடந்த சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டத்தில், வீட்டு நாய்களுக்கு உடலில் ‘சிப்’ பொருத்தவும், அரிசி வடிவ சிப்பும் பொருத்தவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் உள்ள 1.8 லட்சம் தெரு நாய்களில் உடலில் சிப் பொருத்தும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. வீட்டு நாய்கள் உள்ளிட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் பெற உடலில் சிப் பொருத்துவதை கட்டாயப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக 4000 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வீட்டு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் பணி விரைவில் தொடங்கும் என்றும், நாய்களின் உடலில் தோலுக்கு அடியில் ஊசி மூலமாக மைக்ரோ சிப் பொறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சிப்ட் அரிசி அளவில் இருக்கும் என்றும், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடன் தொல்லையால் விபரீதம்.. 2 பிள்ளைகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை.. சென்னையில் சோகம்..!
மைக்ரோ சிப் பொருத்துவதன் மூலம் நாயின் பெயர், இனம், நிறம், பாலினம், வயது, தடுப்பூசி செலுத்தப்பட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்கும். நாய்களின் இந்த தரவுகள் பிரத்யேக மென்பொருள் செயலியின் மூலம் பராமரிக்கப்படும். கடந்த ஆண்டு கணக்கெடுப்புபடி சென்னையில் 1.8 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. அவற்றில் 30 சதவீத நாய்களுக்கு மட்டுமே இனப்பெருக்கக் கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள், ‘தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா, இனப்பெருக்க கட்டுப்பாடு சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்கவும், வீட்டு நாய்கள் தெருவில் கைவிடப்படுவதை தவிர்க்கவும் நாய்களுக்கு சிப் பொருத்தும் நடவடிக்கை கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கடத்தி வரப்பட்ட அரியவகை உயிரினங்கள்.. பயணிகள் 2 பேர் கைது.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!