திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த மெக்கானிக்கல் எஞ்சினியர் விக்னேஷ்வர் முருகானந்தம். எப்போதும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புபவர். அவரது தந்தை அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர். வேலையில்லாத 30 வயதான முருகானந்தம், அதிக சம்பளம் தரும் வேலைக்காக ஏங்கிக் கொண்டிருந்தார். கம்போடியாவில் உள்ள ஒரு சீன சைபர் கிரைம் சிண்டிகேட்டில் இணைந்தார்.
ஜப்பானிய பேராசிரியரை ஆறு மணி நேரம் "டிஜிட்டல் முறையில் கைது" செய்து ஏமாற்றியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விக்னேஷ்வர் கைது செய்யப்பட்டார். விசாரித்தபோது, விக்னேஷ்வர், ‘‘ஆன்லைனில் தொடர்பு கொண்ட ஒரு சீன நிறுவனம் கம்போடியாவில் எங்கள் 'நிறுவனத்தில்' பணிபுரிய அழைத்தது. நிறைய பணம் தருவதாக சீன நிறுவனம் வாக்குறுதி அளித்தது.
அந்த நிறுவனம் கம்போடியாவிற்கு ஒரு டிக்கெட்டை அனுப்பியது.
அவரது சீன தொடர்பு மூலம் டிக்கெட்டுகள் அவருக்கு அனுப்பப்பட்டது. ஏப்ரல் 2024 ல் கம்போடியா சென்றேன். எனக்கு பல இந்திய வங்கிக் கணக்குகள் இருந்தன. அவற்றை கேட்டார்கள். முதலில், எல்லாம் சட்டப்பூர்வமாகத் தோன்றியது. ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டேன். அந்த நிறுவனம் நான் வழங்கிய வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தினர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, ஏதோ தவறு இருப்பதாக உணர ஆரம்பித்தேன்.
இதையும் படிங்க: குழந்தை இல்லாத பெண்ணை "கர்ப்பம்" ஆக்கினால், ரூ.10 லட்சம்; 'நூதன ஃபிராடு' அம்பலம்: 3 பேர் கைது...

அந்தக் கணக்குகள் மூலம் எவ்வளவு பணம் வருகிறது என்பதை என்னிடம் சொல்ல மாட்டார்கள். அவர்களிடத்தில் பல பேர் என்னைப்போல இருப்பதை அறிந்து கொண்டேன். என்னுடன் 20க்கும் மேற்பட்ட சீன நாட்டவர்கள் பணிபுரிந்தனர். அவர்கள் அனைவரும் இந்தியாவையும் அதன் அண்டை நாடுகளையும் குறிவைத்து ஒரு பெரிய சைபர் குற்ற செயல்களில் ஈடுபட்டனர்.
அவர்கள் தங்களை ஒரு 'நிறுவனம்' என்று அழைத்துக் கொண்டனர். அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இது குறித்து கேட்டால் எங்களை 'ஊழியர்கள்' என்று அறிமுகப்படுத்திக் கொள்ளுமாறு கூறப்பட்டது. இதில் இந்தியா, மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த மக்கள் கணினி மற்றும் தொலைத்தொடர்பு துறையில் பணிபுரிய அழைத்து வரப்பட்டனர். அலுவலகம் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டது. ஊழியர்கள் தங்கள் நிபுணத்துவத்திற்கு ஏற்ப பிரிக்கப்பட்டனர்.
இந்திய வங்கிக் கணக்குகளை ஒழுங்குபடுத்தி நிர்வகிப்பதே எனது பங்கு. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல சங்கடமாக உணரத் தொடங்கினேன். இதே காரியத்தைச் செய்யும் பிற குழுக்களும் இருப்பதையும், அவை டெலிகிராம் சேனல்களில் எளிதாகக் கிடைப்பதையும் உணர்ந்தேன். எனவே, முகாமில் ஒரு மாதம் கழித்த பிறகு, 'நிறுவனத்தை' விட்டு வெளியேறி எனது சொந்தத் தொழிலைத் தொடங்க முடிவு செய்தேன்.
இந்தியாவுக்குத் திரும்பினேன். பிறகு, கம்போடியாவை தளமாகக் கொண்ட இதேபோன்ற பிற சைபர் மோசடி செய்பவர்களுக்கு வங்கிக் கணக்குகளை வழங்கத் தொடங்கினேன். இதன் காரணமாக, எனக்கு நல்ல கமிஷன் கிடைத்தது. அது ஒரு இலாபகரமான தொழிலாக இருந்தது. என்னை போலீஸார் பிடிப்பதற்கு முன்பு நிறைய பணம் சம்பாதித்தேன்’’ என காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாத தொடக்கத்தில், தென்மேற்கு டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களில் முருகானந்தமும் ஒருவர். கம்போடியாவில் சைபர் முகாம்களை நடத்தும் சீன நாட்டினருடன் முருகானந்தம் பணியாற்றி வருவதாக டி.சி.பி (தென்மேற்கு) சுரேந்திர சவுத்ரி தெரிவித்தார். இந்த நபர்கள் வெளிநாடுகளில் சைபர் குற்றங்களைச் செய்கிறார்கள்.
இதையும் படிங்க: சைபர் குற்றங்களை தடுக்கும் போலீஸ் புலிகள் ..முன்னால் டிஜிபி .!