தமிழ் திரையுலகில் கண்ணை சிமிட்டாமல் நடிக்க சொன்ன இயக்குநர் யார் என்றால் அது இயக்குநர் செல்வராகவன் தான். சமீபத்தில் தனுஷ் இயக்கிய 'ராயன்' பட இசைவெளியீட்டு விழாவில், "அப்ப எங்களை கண் சிமிட்டாமல் நடிக்க சொன்னதற்காக இன்று என் படத்தில் வருத்தப்படுகிறார் செல்வராகவன், இப்பொழுது தெரிகிறதா சார் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என தனுஷ் புன்னகையுடன் அவரிடம் கூற, செல்வராகவன் சிரித்திருப்பார். அந்த அளவிற்கு செல்வராகவன் படப்பிடிப்பில் கட்டன்ரைட்டாக இருப்பவர்.

செல்வராகவன் 2002ல் வெளியான "காதல் கொண்டேன்" படத்தில் இயக்குநராக அறிமுகமாகி, பின் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், நெஞ்சம் மறப்பதில்லை, என்.ஜி.கே முதலிய படங்களை எழுதி இயக்கி உள்ளார். இதனிலும் இவர் இயக்காமல் எழுதி வெளியான படங்கள் என்றால் துள்ளுவதோ இளமை, யாரடி நீ மோகினி, மாலை நேரத்து மயக்கம் போன்றவை.
இதையும் படிங்க: சமந்தா எடுத்த விபரீத முடிவு.. இல்லத்தரசிகளும் எடுத்தால் நன்றாக இருக்கும்... இணையவாசிகள் நாசுக்காக குமுறல்..!
இவரது படைப்பு எல்லாம் மிக அற்புதமாகவும் சிந்திக்க கூடியதாகவும் இருக்கும். அந்த வகையில் 2010ம் ஆண்டு டிரீம் வேலி கார்ப்பரேஷன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில், கார்த்திக், பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரேமியா, ரீமா சென் மற்றும் பல்லாயிரம் துணை நடிக்கர்களை வைத்து உருவான திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்".

தென்னிந்தியாவில் கி.பி 1279 இல், சோழ வம்சத்தின் வீழ்ச்சியின் காரணமாக, அம்மக்களை பாண்டியர்கள் தங்கள் ராஜ்ஜியத்திலிருந்து வெளியேற்றுவதும் மீண்டும் அதற்காக பழிவாங்க அம்மக்கள் படையெடுத்து வருவதையும் உணர்வு பூர்வமாக சித்தரிக்கும் வகையில் உருவான இக்கதையின் படப்பிடிப்பு சவாலாக இருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் சாலக்குடி மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் முடிந்தது.

ஆனால் இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த "ஆயிரத்தில் ஒருவன்", தமிழில் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் தெலுங்கில் ஹிட் படமாக அமைந்தது. இது ஆரம்பத்தில் செல்வராகவனுக்கு வேதனை அளித்ததை போல், ஆரம்பத்தில் படத்தை பார்த்து புரியாத மக்களுக்கு காலப்போக்கில் இப்படம் புரிய தொடங்கியது. அதன் பின் இப்படத்தை கொண்டாடிய தமிழர்கள், இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என கேட்டு வந்தனர். ஆனால் முதல் பாகம் கொடுத்த வலியிலிருந்து இன்றும் வெளியே வராமல் இருக்கும் செல்வராகவன் அதனை பற்றி பேசுவதே இல்லை. ஆனாலும் பல ரசிகர்கள் மன்னிப்பு கேட்டு, அடுத்த பாகம் எடுப்பது உங்க வேலை..ஹிட் கொடுப்பது எங்களது வேலை என அவருடன் போராடி வருகினறனர்.

இந்த நிலையில், பாட்ஷா, கில்லி, போன்ற படங்கள் ரீரிலீஸ் ஆனதை தொடர்ந்து, தற்பொழுது செல்வராகவன் இயக்கிய, 'ஆயிரத்தில் ஒருவன்' படமும் ரீரிலீஸ் ஆக உள்ளது என படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். 15 வருடமங்களுக்கு பின் மீண்டும் வெளியாக இருக்கும் இத்திரைப்படம் மார்ச் 14ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் அமெரிக்காவிலும் வெளியாகும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் "ஆயிரத்தில் ஒருவன்" தமிழில் மட்டும் ரீரிலீஸ் ஆகவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ரூ.700 கோடி பட்ஜெட்... பிரம்மாண்டத்தில் "பாகுபலி"யை மிஞ்சும் "மகாபாரதம்".. தமிழ் இயக்குநரின் குறி தப்பல..!