இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் ஆனகெஜ்ரிவாலை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் பாஜக மும்முனை போட்டியில் இருக்கிறது.
கெஜ்ரிவால் மீது கடும் தாக்குதல் தொடுத்த காங்கிரஸ் பெண் வேட்பாளர் அல்கா லம்பா, "இந்தியா கூட்டணியில் இருந்து ராஜினாமா செய்ய தயாரா? என்றும் அவருக்கு சவால் விடுத்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சித் தலைவர்களும் நேர்மையற்ற தலைவர்கள் என சமீபத்தில்கெஜ்ரிவால் சாடியதை தொடர்ந்து காங்கிரஸ் ஆம் ஆத்மிக்கு இடையே தெருச்சண்டை போல் மோதல் நீடித்து வருகிறது.
இதையும் படிங்க: 'அரசியலில் இது புதுசு' : "உருவ பொம்மை எரிப்பு"க்குப் பதிலாக, கெஜ்ரிவால் "கட் அவுட்"டை ஆற்றில் மூழ்கடிக்கும் போராட்டம்
கல்காஜி தொகுதியில் வெள்ளியின் தற்போதைய முதல்வர் அதிஷியை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் பெண் வேட்பாளர் அல்கா லம்பா தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசுகையில் மேலும் கூறியதாவது:-
"டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மற்றும் மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் இருவரையும் கெஜ்ரிவால் அவமானப்படுத்தி விட்டார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இப்போது இந்தியாவின் நேர்மையான பிரதமர் மன்மோகன் என்று அவர் புகழாரம் சூட்டுகிறார். இதற்காக கெஜ்ரிவால் மன்மோகன் சிங் மனைவியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் தான் கூட்டணிக்காக காங்கிரஸ் இடம் மண்டியிட்டு பிச்சை கேட்டீர்கள். உங்களுடன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டது மிகப்பெரிய தவறு.
ஆனால் அந்த தேர்தலில் டெல்லியின் ஏழு தொகுதிகளையும் கெஜ்ரிவால் பாஜகவிடம் பறிகொடுத்து விட்டார். கெஜ்ரிவாலுக்கு திராணி இருந்தால் இந்தியா கூட்டணியில் இருந்து விலக தயாரா? அதே நேரத்தில் காங்கிரசை பொருத்தவரை நூறு எம்பிகள் உடன் வலுவாக உள்ளது" என்று அல்கா லம்பா கூறினார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களை நேர்மையற்றவர்கள் என்றும் கெஜ்ரிவால் தான் அனைவரையும் விட நேர்மையானவர் என்றும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட போஸ்டர்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி சந்தீப் தீட்சித், அஜய் மக்கன் ஆகியோரின் பெயர்கள் நேர்மையற்ற தலைவர்களின் பட்டியலில் இடம் பெற்று இருந்தன. பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத், அனுராக் தாகூர், வீரேந்திர சச் தேவா, பர்வேஸ் வர்மா, ரமேஷ் பிதுரி ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் "ஆம் ஆத்மி கட்சி பாஜகவின் 'பி' டீம் என்று வர்ணித்தார். கெஜ்ரி வாலின் குருவான அன்னா ஹசாரேவுக்கும் ஆர்எஸ்எஸ் க்கும் உள்ள தொடர்பின் அடிப்படையில், இந்த குற்றச்சாட்டை அவர் முன் வைத்திருந்தார்.

" பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே எந்தவித வேறுபாடும் இல்லை. நாங்கள் இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி பாஜக ஆகிய இரு கட்சிகளையும் எதிர்த்து போராடி வருகிறோம். இந்தியா கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலுக்காக தான் உருவாக்கப்பட்டது. டெல்லி சட்டசபை மன்ற தேர்தலில் இந்த கூட்டணி செயல்படவில்லை .பொய் சொல்லியே டெல்லி முதல் அமைச்சரானவர் கெஜ்ரி வால் என்றும் அவர் தாக்குதல் தொடுத்தார்.
டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தொடர்ச்சியாக மூன்று தேர்தலில் வெற்றி பெற்று 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த இரு தேர்தல்களில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவியது. 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகள் நடைபெற்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: 382 கோடி டெல்லி சுகாதார ஊழலில், கெஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு; ஆம் ஆத்மி பதிலடி