தொகுதி சீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டியதிருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு மீது குற்றம்சாட்டினார். அது மட்டுமல்லாமல், இது தொடர்பாக ஆலோசிக்க மார்ச் 5ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் தமிழக அரசு கூட்டியுள்ளது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோர் அளித்த உறுதியில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்துக்கான தொகுதிகள் குறையாது என்பதை உறுதியளிக்கிறோம். தென் மாநிலங்கள் தங்களுக்குரிய சரியான தொகுதிகளைப் பெறும் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்தி மொழி குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இந்தி மொழி திணிப்பால் எத்தனை மொழிகள் அழிந்துள்ளன என்பதை பட்டியலிட்டு விளக்கியுள்ளார். அதில் அவர் கூறுகையில் “ பிற மாநிலங்களைச் சேர்ந்த அன்பு சகோதர, சகோதரிகளே எத்தனை மொழிகளை இந்தி மொழி விழுங்கியிருக்கிறது என சிந்தித்துள்ளீர்களா? போஜ்பூரி, மைதிலி, அவாதி, பிராய், பன்டேலி, கர்க்வாலி, குமோனி, மாகி, மார்வாரி, மாள்வி, சத்தீஸ்கரி சந்தாலி, அகிகா,ஹோ, காரியா, கோர்தா, குர்மாலி, கூர்க், முண்டாரி உள்ளிட்ட பல்வேறு மொழிகள் இன்று வாழ்வதற்காக தத்தளித்து வருகின்றன.
இதையும் படிங்க: கலெக்டர், எஸ்.பி.யை மிரட்டுவது தான் திராவிட மாடலா? முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பும் அன்புமணி..!

நாடு முழுவதும் இந்தி என்ற ஒரே மொழிதான் என்ற அடையாளத்தை மத்திய அரசு திணிக்கிறது, இந்த மொழி பழமையான தாய்மொழிகளை கொன்றுவருகிறது. உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலங்கள் ஒருபோதும் இந்தி பேசும் மாநிலங்கள் அல்ல. இந்த மாநில மக்களின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்களாக மாறிவிட்டன. இது எங்கு முடிகிறது என்பது எங்களுக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது”
இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ சமூகத்தை பிளவுபடுத்தும் நிழல் நடவடிக்கையால் தமிழகத்தில் உங்களின் மோசமான நிர்வாகத்தை ஒருபோதும் மறைக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எந்த விவகாரத்தில் என்ன பதில் அளிக்கப் போகிறார் என்பதைக் கேட்பதற்கு மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. இந்தி மொழி பேசும் மாநிலத்தில் இருந்துதான் ராகுல் காந்தி எம்.பியாகியுள்ளார்தானே” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தினம், தினம் ஷுட்டிங் நடத்துகிறீர்கள்... முதலமைச்சர் மீது பாயும் அண்ணாமலை...!