வீட்டிற்கே தேடிச் சென்ற பாமகவினரை லெப்ஹேண்டில் டீல் செய்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் பாமக தலைமையின் கோபம் உச்சத்திற்கு சென்றுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தது பாமக. இதனால், பாமகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து அழகு பார்த்தது அதிமுக. ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, அதிமுகவில் இருந்து விலகி பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. இதனால் வெறுப்பின் உச்சத்துக்கே சென்றார் எடப்பாடி பழனிசாமி.

வரும் சட்டமன்றத் தேர்தலிலாவது பாமக அதிமுக கூட்டணியில் இணையும் எனக் கூறப்பட்டு வருகிறது. ஆனால், பாமக வந்தால் வரட்டும்.. போனால் போகட்டும் என்கிற நிலைப்பாட்டில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. காரணம் நாடாளுமன்றத் தேர்தலின்போது பாமக காக்க வைத்து கழுத்தறுத்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி கருதுகிறார்.
இதையும் படிங்க: தயாநிதி மாறனுக்கு எதிரான வழக்கை எதிர்கொள்ளத் தயார்.. விடுவிக்கக்கோரிய மனுவை திரும்ப பெற்ற இபிஎஸ்..!
இந்நிலையில், சமீபத்தில் பாமக சார்பில், வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த நிதிநிலை அறிக்கை அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்று முடிவு செய்த அந்த கட்சியின் தலைமை, ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து கொடுக்கச் சொல்லி அந்த கட்சியின் நிர்வாகிகளுக்கு பாமக தலைமை உத்தரவிட்டது. அதன்படி விசிக, மதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து பாமக நிர்வாகிகள் நிழல் நிதிநிலை பட்ஜெட் காப்பியை கொடுத்துள்ளனர்.

அந்த கட்சிகளுக்கு கொடுத்ததைப் போலவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் கொடுக்க வேண்டும் என்று அவரது வீட்டிற்குச் சென்றபோது மற்ற கட்சிகள் கொடுத்த மரியாதை எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து பாமக நிர்வாகிகளுக்கு கிடைக்கவில்லை என்கிறார்கள். நீண்ட நேரம் காத்திருக்க வைத்து, அதன் பிறகு போனால் போகட்டும் என்று தனது உதவியாளரை வைத்து வாங்கிக் கொண்டு அனுப்பி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

அரசியலில் பாமகவுக்கு நேரடி எதிரி என்று சொல்லப்படுகிற விசிக தலைவர் திருமாவளவன் கூட அன்போடு உபசரித்து, நிதிநிலை பட்ஜெட் காப்பியை வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால், வரும் தேர்தலில் கூட்டணி என்று பேசப்படும் எடப்பாடி பழனிச்சாமி இப்படி நடந்து கொள்கிறாரே.. என்று அங்கே சென்ற நிர்வாகிகள் புலம்பி கொண்டே திரும்பி உள்ளனர். இந்த தகவலை தைலாபுரத்திற்கும் தட்டி விட்டிருக்கிறார்கள். இதனால் தைலாபுரம் தலைவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் பிரேமலதாவுக்கு துணை முதல்வர் பதவி..! உறுதி கொடுத்த எடப்பாடியார்..?