புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள ஆண்டியப்பிள்ளை பட்டியில் ஆர் எஸ் ஆர் என்ற பெயரில் தேங்காய் நார் உரித்து கயிறு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலை ஆனது வெளிச்சந்தையில் இருந்து தேங்காய் மட்டைகள் வாங்கி அதனை இயந்திரம் மூலம் நாராக்கி, அதன் மூலம் கயிறுகளை தயாரித்து வெளி மாநிலங்களுக்கு இறக்குமதி செய்து வருகிறது.

இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த தேங்காய் மட்டைகளில் திடீரென தீ பற்றியுள்ளது. தொடர்ந்து தீ மள மளவென்று எரிந்ததில் தொழிற்சாலை முழுவதும் தீ பரவியுள்ளது. இதுகுறித்து அங்கிருந்த தொழிலாளர்கள் இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கை வைத்த ED.! பகீர் கிளப்பும் தில்லாலங்கடி: கூண்டோடு சிக்கும் திமுக புள்ளிகள்..!

முன்னதாக தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கூடுதலாக மற்றொரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு, இரண்டு தீயணைப்பு வண்டிகளில் இருந்து தண்ணீர் பீச்சி அடைக்கப்பட்டது. சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் தொழிற்சாலை முற்றிலும் இருந்த ஏராளமான பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பல் ஆகின. மூலப் பொருட்கள், தேங்காய் மட்டைகள், மின் மோட்டார், கன்வேயர் பெல்ட் என 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தது.
இதையும் படிங்க: கார்டு மேல இருக்குற நம்பர் போலோ.. அமெரிக்க வாழ் இந்தியர்களையும் விட்டு வைக்கல.. சைபர் கிரைமில் ஈடுபட்ட 62 பேர் கைது..!