முதலில் பணம் கொடுத்து உதவி செய்து பின்னர் படுக்கைக்கு அழைத்த நா.த.க நிர்வாகியை தட்டி தூக்கியது போலீஸ்
கிண்டி மடுவங்கரையில் ஐடி நிறுவனம் நடத்தி வருபவர் சக்திவேல். சென்னை கிழக்கு கடற்கரை சாலை முத்தண்டி பகுதியில் வசித்து வரும் இவர் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளராக உள்ளார் . இவரது நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக வேலை செய்து வந்த 25 வயது இளம்பெண் குடும்ப பிரச்சனை காரணமாக சக்திவேலிடம் இரண்டு லட்சம் ரூபாய் கடனாக வாங்கி உள்ளார் பணம் கொடுத்த கையோடு பெண்ணிடம் சக்திவேல் நெருக்கமாக பேச முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணை சக்திவேல் தனியாக அழைத்ததாகவும் அவர் வர மறுக்கவே தான் கொடுத்த பணத்தை உடனடியாக தரும்படியும் மிரட்டி உள்ளார் இதனால் வேதனை அடைந்த இளம் பெண் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தினர் அப்போது சக்திவேல் நிறுவனத்தில் பணியாற்றும் மேலும் சில பெண்களுடன் பணம் கொடுத்து உதவுவது போல் ஏமாற்றி பாலியல் துன்புறுத்தல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது
இதையும் படிங்க: 100 நாள் வேலை ..திட்டத்தை எதிர்க்கும் சீமான் ..வேலை கேட்டு நிற்கும் தாயார்
மேலும் தன் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை தவறாக வீடியோ ஏதாவது எடுத்துவைத்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் சக்திவேலின் செல்போன் மற்றும் லேப்டாப்புகளை ஆய்வு செய்து வருகின்றனர்
இதையும் படிங்க: 100 நாள் வேலை ..திட்டத்தை எதிர்க்கும் சீமான் ..வேலை கேட்டு நிற்கும் தாயார்