சென்னையை அடுத்த தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் லியாஸ் தமிழரசன் 24 வயதான இவர் சேலையூர் செம்பாக்கம் திருவிக தெருவை சேர்ந்த ஏழுமலையின் மகன் ஆவார். அதே பகுதியில் தனியார் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படுத்தப் படித்து வரும் இவர் அரசியல் கட்சி பதவியில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பள்ளியில் படிக்கும் போதே படிப்பை விட்டு விட்டு தறுதலையாகவே வளர்ந்துள்ளான். இந்த லியாஸ் தமிழரசன் 12 ஆம் வகுப்பு படிக்கும் போது பல பெண்களுக்கு வலை விரித்து தனது காதல் வலையில் விழ செய்துள்ளான். அந்த வகையில் ஒரு பெண்ணிடம் மிக நெருக்கமாக பழகி காதலிக்க தொடங்கி உள்ளான்.
இதையும் படிங்க: 477 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பிய 4 இஸ்ரேலிய பெண்கள்..! பத்திரமாக திரும்ப ஒப்படைத்த ஹமாஸ்!
அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி கார்,ஐபோன், ஐ வாட்ச் நகையென சிறுகச் சிறுக சுமார் 20 லட்சம் ரூபாய் பணமும் 20 சவரன் நகையும் பெற்று ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளான்.

அது மட்டும் இன்றி காதலிக்க தொடங்கி மூன்று வருடங்கள் கழித்து 2022 ஆம் ஆண்டு முதல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி தொடர்ந்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளான். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சொல்லும்போது அதற்கு திருமணம் எல்லாம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதோடு அந்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என கூறி மிரட்டல் எடுத்துள்ளான்.
இந்தப் பிரச்சனைக்கு பிறகு தான் லியாசின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கங்களை சோதனை செய்து பார்த்தபோது அவன் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்களிடமும் இதேபோன்று திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மோசடி செய்துள்ளது அம்பலம் ஆகியுள்ளது.

இது தொடர்பாக அந்தப் பெண் தரப்பினர் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த வழக்கை பதிவு செய்த போலீசார் லியாஸ் தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண்ணை ஏமாற்றி நகை பணம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து போலீசார் லியாஸ் தமிழரசனை நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்குப் பிறகுதான் ஒரு மிகப்பெரிய காமெடி அரங்கேற்றமே நடந்திருக்கிறது. பெண்களை ஏமாற்றி ஃப்ராடு வேலை செய்த லியாஸ் தமிழரசன் ஒரு பாஜக பிரமுகர் என்று திமுக தரப்பிலும் திமுக ஆதரவு பத்திரிகைகள் தரப்பிலும் தொடர்ந்து பரப்பப்பட்டு வந்தது. பாஜக இளைஞரணி செயலாளர் பதவியில் உள்ளான் லியாஸ் தமிழரசன் என திமுக ஐடி விங் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவரது புகைப்படத்தை போட்டு பாஜகவின் இலட்சணத்தை பாருங்கள் பரப்பி வந்தனர்.

இதுகுறித்து பாஜக தரப்பில் தொடர்ந்து எதிர்க் தாக்குதலும் நடத்தப்பட்டு வருகிறது. பெண்களை ஏமாற்றிய அந்த கொடூரன் ஒரு அக்மார்க் திமுக காரன் தான் என பாஜகவினர் x மற்றும் சமூக வலைதளங்களில் திமுக கொடியுடன் லியாஸ் தமிழரசன் அமர்ந்திருக்கும் படங்களை பகிர்ந்து கமெண்ட்களை போட்டு வருகின்றனர். லியாஸ் தமிழரசனின் தந்தை பரம்பரை திமுக காரர்.
திமுகவில் இருந்து வந்த லியாஸ் தமிழரசன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் பாஜகவில் இணைந்துள்ளார். பாஜகவில் அனைத்து பொறுப்புகளும் கடந்த செப்டம்பர் மாதம் முதலை காலாவதி ஆகிவிட்டது 2024 செப்டம்பர் மாதம் துவங்கி இந்த பருவத்திற்கான புதிய உறுப்பினர் புதுப்பித்தலை கூட லியாஸ் தமிழரசன் செய்யவில்லை என கண்டுபிடித்துள்ளோம்.

அதன் அடிப்படையில் இன்றைய தேதிக்கு வியாஸ் தமிழரசன் பாஜகவில் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை. பின் எப்படி இவனை பாஜக மாவட்ட செயலாளர்கள் என அனைத்து தமிழ் ஊடகங்களும் சொல்லி வைத்தது. போல் அளிக்கிறது ஊடகங்கள் உண்மையை சரி பார்த்து வெளியிட வேண்டுமா என பாஜக மாநில பொறுப்பு தலைவர்கள் ஆவேசத்தோடு கேள்வி எழுப்பி உள்ளனர்.
சமீப காலமாக சர்ச்சைகளில் சிக்குபவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி காத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஐடி விங் தரப்பினர் ஒருவர் சிக்கினால் கூட அதை வைத்து ஒரு மாதத்திற்கு சம்பந்தப்பட்ட கட்சியை போட்டு தாக்குவது தற்போது வாடிக்கையாக்கி உள்ளது.
இதையும் படிங்க: கல்வியில் வரலாற்று சாதனை படைத்த 'சூப்பர் மம்மி'; 43 வயதில், "பிஎச்டி" டாக்டர் பட்டம் பெறும் 19 குழந்தைகளின் தாய்!