எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 292 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இதில் 121 மாணவிகள் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 59 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த கல்லூரியில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கம்ப்யூட்டர், கார்மெண்ட் டெக்னாலஜி உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வன்கொடுமை வழக்குகள் குறைந்துள்ளன.. புள்ளி விவரங்களைக் காட்டி மு.க.ஸ்டாலின் பேச்சு..!

இக்கல்லூரியில் கார்மெண்ட் டெக்னாலஜி பாடப்பிரிவில்
முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவிகள் மூன்று பேர் தங்களுக்கு மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியர் மதன்குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி முதல்வர் பேபி லதாவிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இது குறித்து கல்லூரிக்கு சென்ற போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர் இதனை தொடர்ந்து புகார் குள்ளான பேராசிரியரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 12ம் வகுப்பு தேர்வெழுதிய 6 மாணவிகளிடம் பிட் சோதனையின் போது சில்மிஷம்: போக்சோவில் ஆசிரியர் கைது.!