2025-26 நிதியாண்டு ஏப்ரல்-1ம் தேதி தொடங்குகிறது, முதல் காலாண்டு ஜூன் 30ம் தேதி முடிகிறது. இந்த 3 மாதங்களுக்கான வட்டிவீதத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
2025, நிதியாண்டு ஏப்ரல் 1ம் தேதி தொடங்குகிறது, முதல் காலாண்டு ஜூன் 30ம் தேதி முடிகிறது. இந்த முதல் காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டிவீதம் கடந்த நிதியாண்டான 2024-25ம் ஆண்டின் கடைசி காலாண்டான ஜனவரி1 முதல் மார்ச் 31வரை நீடித்த அதே வட்டிதான் இப்போதும் நீடிக்கிறது. அந்த வட்டிவீதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
இதையும் படிங்க: தீராத தமிழக மீனவர் பிரச்சினை.. திமுக, காங்கிரஸே மூலக் காரணம்.. மறைமுகமாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!!
இதன்படி, சுகன்யா சம்ருதி திட்டத்துக்கு வட்டிவீதம் 8.2 சதவீதமாகத் தொடர்கிறது, 3 ஆண்டுகளுக்கான வைப்பு நிதிக்கு 7.1 சதவீதம் என்ற வட்டி தொடர்கிறது.பிபிபிஎப் திட்டத்துக்கு 7.1 சதவீத வட்டியும், அஞ்சலகங்களில் டெபாசிட் திட்டத்துக்கு 4 சதவீதம் என்ற வட்டி தொடர்கிறது.கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி வீதம் 7.5 சதவீதமாகவே இருக்கிறது. இந்த திட்டத்தில் முதலீடு 115 மாதங்களில் முதிர்ச்சியடையும். தேசிய சேமிப்பு பத்திரத்துக்கான வட்டி வீதம் 7.7 சதவீதமாக இருக்கும்.

வங்கிகள், அஞ்சலகங்களில் உள்ள சிறுசேமிப்புத் திட்டங்கள், டெபாசிட்களுக்கான வட்டிவீதம் தொடர்ந்து 5வது காலாண்டாக எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. 2023-24ம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் மட்டு்ம் சில திட்டங்களுக்கு மட்டும் வட்டியை மத்திய அரசு மாற்றியது மற்றவகையில் பெரிதாக மாற்றமில்லாமல் 5வது காலாண்டாக நீடிக்கிறது.
இதையும் படிங்க: தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு ‘எஸ்எஸ்ஏ நிதி’யை வழங்குங்கள்.. நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை..!