பண்டைய காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது. அது காலப்போக்கில் ஒழிக்கப்பட்டுவிட்டது. கணவன் எரிக்கப்படும் போது மனைவி அந்த தீயில் விழும் பழக்கம் தற்போது வழக்கத்தில் இல்லை என்றாலும் முன்காலங்களில் அது வழக்கத்தில் இருந்தது. பெண்களின் வாழுவுரிமையை பறிக்கும் விதமாக இருப்பதாக கூறி இந்த உடன்கட்டை ஏறும் வழக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பேரனின் பிரிவை தாங்க முடியாமல் பேரன் எரிக்கப்பட்ட தீயில் தாத்தா குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிகோலியா கிராமத்தை சேர்ந்தவர்கள் அபய் ராஜ் யாதவ் - சவிதா யாதவ் தம்பதிகள். இந்த நிலையில் சவிதா யாதவ் அவரது வீட்டில் இறந்து கிடந்துள்ளார். அவரது அருகில் அபய் ராஜ் சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளது.இதுதொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் நைட்ல இப்படியா நடக்கும்… புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அபய் ராஜ் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே இறந்த இருவர்ன் உடல் அவரகளது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இருவரின் உடலுக்கும் குடும்பத்தினர் ஒன்றாக இறுதி சடங்கு நடத்தினர். அதன்பிறகு அவர்களின் உடல் எரிக்கப்பட்டது.

இந்த நிலையில் அபய் ராஜின் தாத்தா ராமவதார் யாதவ் பேரனின் பிரிவை தாங்க முடியாமல் உடைந்து போய் உட்காரந்திருந்ததாக கூறப்படுகிறது. அன்று இரவு திடீரென்று மாயமான ராமவதார் யாதவை உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் அபய் ராஜ் எரிக்கப்பட்ட இடத்துக்கு சென்று பார்த்த போது அங்கு ராமவதார் யாதவின் உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பேரன் அபய் ராஜின் பிரிவை தாங்க முடியாத தாத்தா ராமவதார் யாதவ் அபய் ராஜ் எரிக்கப்பட்ட நெரிப்பில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: வேலையில்லை என்ற HR... தீக்குளித்த பெண் பரபரப்பு வாக்குமூலம்!!