காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்ட முடிந்த நிலையில், சென்னையின் முக்கிய சுற்றுலாத் தலங்களான மெரீனா கடற்கரை, கிண்டி பூங்கா, மாமல்லபுரம் கடற்கரை, உணவகங்கள், திரையரங்குகள் என திரும்பிய திசையெல்லாம் காதலர்களாக காட்சி அளித்தனர்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு பெங்களுர், புனே உள்ளிட்ட நகரங்களில் காதலர் தினத்தன்று கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும். உச்சக்கட்டமாக பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள் பொதுஇடங்களில் ஒன்றாக இருக்கும் காதலர்களை அணுகி மிரட்டி தாலிகட்ட சொல்லி வற்புறுத்திய காட்சிகளை பார்த்திருப்போம். தமிழ்நாட்டில் கூட அதுபோன்ற ஒருசில சம்பவங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. ஆனால் காவல்துறையின் கடுமையான எச்சரிக்கைகளுக்குப் பிறகு அத்தகைய சம்பவங்கள் மறைந்து விட்டன.
இதையும் படிங்க: காதலர் தினத்தில்.. இந்தியாவின் கருப்பு நாள்..மறக்க முடியுமா? அந்த மாவீரர்களின் உயிர் தியாகத்தை ..

அக்னி பாலா (மாவட்ட பொது செயலாளர் இந்து முன்னணி)
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பேக்கரி ஒன்று சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்தது. அதாவது ஜோடியாக வந்து கேக்குகள், இனிப்புகள் வாங்கினால் பாதி விலைக்கு தரப்படும் என அறிவிப்பு வைத்தது. இதற்கு அங்குள்ள இந்து முன்னணி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

சுரேஷ் தேவகோட்டை இந்து முன்னணி நகர் தலைவர்)
( தாலியுடன் வந்தவர்)
ஜோடியாக காதலர்கள் கடைக்கு வந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். போதாக்குறைக்கு கையில் தாலியோடு கடை வாசலில் வந்து நின்றனர். இதுபற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு திரண்டிருந்தவர்களை கலைந்து போக அறிவுறுத்தினர்.

மாரியப்பன், இந்து முன்னனி தேவகோட்டை நகர பொதுச் செயலாளர்
தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்ட இந்து முன்னணி பொதுச்செயலாளர் அக்னிபாலா, தேவக்கோட்டை இந்து முன்னணி நகரத் தலைவர் சுரேஷ், இந்து முன்னணி தேவக்கோட்டை பொதுச்செயலாளர் மாரியப்பன், இந்து முன்னணி மாவட்டத் தலைவர் தினேஷ்ராஜா, இந்து முன்னணி காரைக்குடி நகரத் தலைவர் கார்த்திகேயன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் வரும் 28-ந் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினேஷ்ராஜா, இந்து முன்னணி மாவட்ட இளைஞரணி தலைவர்
இதையும் படிங்க: காதல் ஜோடிகளின் பெயரைக் பொறிக்கும் ஆட்டோகிராப் செடி..! விதவிதமாய் காதலர் தினம்