திரைப்பட இயக்குநரான சங்ககிரி ராஜ்குமார், இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுதொடர்பாக இலங்கையில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், தமிழக தற்போதைய தமிழக அரசியல் சூழலை இலங்கை மக்கள் எப்படி பார்க்கிறார்கள், சீமான் கருத்துகளை பற்றி என்ன நினைக்கிறார்கள், 1983 முதல் விடுதலைக்காக இயங்கிய 1983 முதல் விடுதலைக்காக இயங்கிய இயக்கங்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் சில புனையப்பட்ட சம்பவங்களும், புதிய உண்மைகளும் கிடைக்கும் என்று நம்புவதாகவும் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் கட்சித் தொடங்கியதிலிருந்தேப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொள்கைத் தலைவனாகக் கொண்டு செயல்படும் இவர், அவரை சந்தித்தது குறித்தும், அவருடன் உணவு சாப்பிட்டது குறித்தும், பயணித்தது குறித்தும் தொடர்ந்து மேடைகளில் பேசிவந்தார். அப்போதே பலர், சீமான் கூறுவதெல்லாம் பொய்..." 'சீமான்பிரபாகரனை சந்திக்கவே இல்லை...' 'சீமான் பிரபாகரனை 10 நிமிடங்கள்தான் சந்தித்தார்' என்றெல்லாம் விமர்சித்தனர். இந்த விவகாரங்கள் அரசியல் வட்டாரத்தில் அப்போது விவாதமானது. இந்த நிலையில்தான் சமீபத்தில் பெரியார் குறித்தும், அவரின் கொள்கைகள் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்து சீமான் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
இதையும் படிங்க: சீமான் இப்படி பேச காரணமே விஜய் தான் ...! கொளுத்தி போட்ட புகழேந்தி...!

அதனால், பல அரசியல் தலைவர்களும் சீமானுக்கு கண்டனங்களையும், அதிருப்தியையும் தெரிவித்துவந்தனர். இதற்கிடையில்தான் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், `இவர் அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால், அந்தப் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவர் என்கிற அடிப்படையில்' என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது மீண்டும் அரசியல் வட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: சீமானால் சிக்கலில் சிக்கிய சீதாலட்சுமி... புயலைக் கிளப்பும் திருமுருகன் காந்தி - ரெண்டே நாள் தான் கெடு!