இப்போது தேர்தல் நடந்தால், தமிழக முதல்வராக யார் வருவார்கள்? மும்மொழிக் கொள்கை, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை சர்ச்சைக்கு மத்தியில் சி ஓட்டர் கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது.
"கடந்த சில வாரங்களாக, தமிழ அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எல்லை மறுவரையறை, மும்மொழி கொள்கை, இந்தி எதிர்ப்பு ஆகிய விவகாரங்களில் மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். மறுபுறம், டாஸ்மாக் ஊழலில் திமுக அரசின் அமைச்சர்கள் அமலாக்கத் துறையின் கண்காணிப்பில் உள்ளனர். இதற்கிடையில், இன்று தேர்தல் நடந்தால் தமிழ்நாட்டின் முதல்வராக யார் வருவார் என்பதைக் கண்டறிய சி-வோட்டர் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது.

இந்த கணக்கெடுப்பின் முடிவுகள், பதிலளித்தவர்களில் 27 சதவீதத்தினர் முதல் தேர்வாக தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்வு செய்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நான்காவது இடம் பிடித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் 18 சதவீத மக்களின் விருப்பத்துடன் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 10 சதவீத மக்களின் விருப்பத்துடன் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 9 சதவீத மக்களின் விருப்பத்துடன் நான்காவது இடத்தில் இருப்பதாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது.

இதையும் படிங்க: திமுக நிறுவனத்திற்கு திறப்பு விழா நடத்தியதே விஜய்தான்- டாராகப் பொளந்த அண்ணாமலை
சி.வோட்டரின் சமீபத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி முதல்வர் ஸ்டாலினின் தலைமைத்துவம், அவரது நிர்வாகத்தின் காரணமாக அவர் முதலிடத்தில் உள்ளார். அவர் தொடர்ந்து தமிழ் மொழியின் உரிமை பிரச்சினையை எழுப்பி வருகிறார். மத்திய அரசின் முன் தலைவணங்கவில்லை. இது அவரின் மதிப்பீடுகளை அதிகரித்துள்ளது. விஜய் இரண்டாவது இடத்தில் இருப்பது அவரின் வளர்ந்து வரும் அரசியல் ஈர்ப்பை உறுதி செய்கிறது.அவரது கட்சி இன்னும் முறையான தேர்தலை அனுகவில்லை. இருந்தபோதும், அவர் மக்களின் இரண்டாவது தேர்வாக உருவெடுத்துள்ளார்.

அடுத்த ஆண்டு மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஸ்டாலினின் அரசில் எத்தனை சதவீத மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்? இந்த கணக்கெடுப்பில், தமிழக அரசின் பணிகளும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதில், 15 சதவீத மக்கள் அரசின் செயல்பாடுகள், செயல்திறனில் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் 36 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர். 25 சதவீதம் பேர் திருப்தி அடையவில்லை. 24 சதவீதம் பேர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

மு.க. ஸ்டாலினின் செயல்திறனில் மிகவும் திருப்தி அடைவதாக 22 சதவீதம் பேர் கூறியுள்ளனர். அதே நேரத்தில் 33 சதவீதம் பேர் "ஓரளவு திருப்தி அடைவதாக" தெரிவித்துள்ளனர். 22 சதவீதம் பேர் "திருப்தியடையவில்லை" என்றும், 23 சதவீதம் பேர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பில் மு.க.ஸ்டாலின் மிகவும் விரும்பப்படும் தலைவராக தொடர்ந்து இருப்பதைக் காட்டுகின்றன.
இதையும் படிங்க: தவெக-வில் உட்கட்சி பூசல்... தாடி பாலாஜி சொல்வது என்ன..?