சமீபகாலமாக ஆன்லைனில் பெண் பார்த்து திருமணம் செய்வது பெரிய பிரச்சனையில் தான் முடிகிறது. அதுவும் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்வது, பணம், நகைகளை கொள்ளையடிப்பது என பல குற்றச்சம்பவங்கள் நடந்து வருகிறது. மேட்ரிமோனியல் என்ற பெயரில் போலி கணக்குகள் உருவாக்கி, ஏராளமான ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இதில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் மோசடியில் ஈடுபட தொடங்கிவிட்டனர். ஆன்லைனில் வரன் தேடவே பயப்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

அந்த வகையில் திருப்பூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருப்பூர் தாராபுரத்தை சேர்ந்த 30 வயது பேக்கரி ஓனர் ஒருவர், மேட்ரிமோனியலில் தனக்கு பெண் தேடியுள்ளார். அதில் ஒரு பெண்ணை மிகவும் பிடித்து போய்விட்டது. அவரையே திருமணமும் செய்துள்ளார். ஆனால், அந்த பெண், ஈரோடு, திருப்பூர், கோவை, சென்னை என பல்வேறு இடங்களில் அரசு அதிகாரிகள், சர்வேயர், டிஎஸ்பி, சப்-இன்ஸ்பெக்டர், சாப்ட்வேர் என்ஜினீயர், திருமணமாகாத இளைஞர்கள், தொழிலதிபர்கள் , அரசியல்வாதிகள், ஆடு மேய்ப்பவர்கள், மாடு மேய்ப்பவர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நடிகைக்கு பாலியல் தொல்லை... ஹோலி கொண்டாட்டத்தில் நிகழ்ந்த பரபரப்பு!!

இதுமட்டுமின்றி அவர்களிடம் லட்சக்கணக்கில் நகை, பணத்தை பறித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பேக்கரி ஓனருக்கு திருமணம் நடைபெற்ற 2 நாளுக்கு பிறகு தான் தெரிந்துள்ளது. அந்த பெண்ணின் செல்போனை எதேச்சையாக பார்த்தபோது, அதில் தன்னுடைய மனைவி, பல ஆண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் ஆபாச புகைப்படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுக்குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் மேட்ரிமோனியில் பெண் தேடி வரும் ஆண்களின் செல்போன் நம்பருக்கு பேசி அவர்களை தனிமையில் சந்திந்து அவர்களுடன் உல்லாசமாக இருந்ததும் அதை ரகசியமாக வீடியோ எடுத்து, அதை வைத்து மிரட்டி அவர்களிடம் இருந்து பணம், நகை கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.
இதனால் இது தொடர்பாக, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சென்னை இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து வெளியான செய்திக் குறிப்பில், சைபர் குற்றவாளிகள் தற்போது திருமண தளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, அந்த தளங்களில் திருமண வரன்களைத்தேடும் நபர்களை குறிவைக்கிறார்கள். பின்னர் அவர்களை தொடர்புகொண்டு, தொடர்ந்து உரையாடல்கள் மூலம் நம்பிக்கையை பெறுகின்றனர். அவர்களுடன் நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டவுடன், அவர்களை மோசடியில் சிக்கவைக்கின்றனர்.

தேசிய சைபர் கிரைம் புகார் போர்டலில் 2024, 2025-ம் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திருமண வரன்தேடும் தளங்களின் மூலம் மோசடி தொடர்பான 379 புகார்கள் பதிவாகியுள்ளன. எனவே, பொதுமக்கள் ஆன்லைனில் சந்திக்கும் நபர்களின் பின்னணியை சரிபார்க்கவும். அவர்கள் வீடியோ அழைப்புகள் அல்லது நேரடி சந்திப்புகளைத் தவிர்த்தால் எச்சரிக்கையாக இருங்கள். இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால், உடனடியாக நடவடிக்கை எடுககவும். சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-ஐ அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in-ல் புகார் பதிவு செய்யவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரியாணிக்காக கைதான இருவர்... கோவையில் நடந்த வினோத சம்பவம்!!