காஞ்சிபுரம் அடுத்த ஏகனாம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுமதி. வயது 23. (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் ஏழு மணி அளவில் கருக்குப்பேட்டையில் உள்ள கடையில் பொருட்களை வாங்கி கண்டு தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வீதியின் ஓரத்தில் இருளில் அமர்ந்திருந்த கோனேரி குப்பம் பகுதியை சேர்ந்த நண்பர்களான நான்கு இளைஞர்கள், அவரை கிண்டல் செய்து பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

இதில் பயந்து போன சுமதி,வேகவேகமாக அங்கிருந்து சென்றுள்ளார். அப்போது அந்த கும்பலில் இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளியும், கொலை வழக்கில் தொடர்புடைய ரங்கா (வயது 23) என்ற வாலிபர் சுமதியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவனுடன் இர்நுத மற்றொரு சரித்திர பதிவேடு குற்றவாளியான சக்தி என்ற சதீஷ்குமார் (வயது 22) ,சந்திரசேகர் (வயது 22) ,வெங்கட் (வயது 21) ஆகியோரும் சேர்ந்து அப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து தப்பி ஓடிய அப்பெண் சுமதி, இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலில் தூக்க மாத்திரை.. மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க சொன்ன தாய்.. பணத்தாசையால் நேர்ந்த கொடூரம்...!

சுமதி அளித்த புகாரின் பேரில் கோனேரி குப்பம் பகுதியில் பதுங்கி இருந்த ரங்கா, சக்தி என்ற சதீஷ்குமார், சந்திரசேகர் ஆகிய மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். முன்னதாக போலீஸ் கைது செய்யும் போது தப்பி ஓட முயன்றாதில் சரித்திர பதிவேடு குற்றவாளியான ரங்கா மற்றும் சக்தி என்ற சதீஷ்குமார் இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.

குற்றவாளிகளே குற்றத்தை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர்கள் நான்கு பேர் மீதும் 87, 76, 351(3), 64 (1), R/W 62 BNS & 4 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட வெங்கட் என்ற இளைஞன் தலைமறைவாக உள்ளதால் போலீசார் அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.

எப்போதுமே அதிக மக்கள் நடமாட்டம் உள்ள கருக்குபேட்டை பகுதியில் ஒரு இளம் பெண்ணை நான்கு இளைஞர்கள் கேலி கிண்டல் செய்து அவரை பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெளியில் நடமாடவே அச்சமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 100 பெண்களுடன் 'டேட்டிங்'..! ரூ.3 கோடி சுருட்டிய 'காதல் மன்னன்' கைது..!